உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை புதிய வாயில்: முதல்வர் திறப்பு

சட்டசபை புதிய வாயில்: முதல்வர் திறப்பு

பெங்களூரு : புதிய கலைநயத்துடன் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை திறந்து வைத்து, சட்டசபை வளாகத்திற்குள், வலது கால் எடுத்து வைத்து, முதல்வர் சித்தராமையா உற்சாகத்துடன் நுழைந்தார்.பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள சட்டசபை வளாகத்திற்கு செல்லும் வாயில், இதற்கு முன் இரும்பால் செய்யப்பட்டிருந்தது. இதை அகற்றி விட்டு, கருங்காலி மரத்தில், மைசூரு அரண்மனை நுழைவு வாயில் போன்று, மிகவும் கலைநயமிக்கதாக அமைக்கப்பட்டது. 15 அடி உயரம், 16 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாயிலை அமைப்பது, சபாநாயகர் காதரின் கனவாக இருந்தது.மொத்தம் மூன்று கதவுகள் உள்ளன. கதவுகளின் கைப்பிடிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேல் பகுதியில், கர்நாடக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. இதை மைசூரை சேர்ந்த கிஜர் அலிகான் என்ற கலைஞர் வடிவமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, முதல்வர் சித்தராமையா இந்த கதவை திறந்து வைத்தார். பின், வலது கால் எடுத்து வைத்து, சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்தார். அதன்பின், சபாநாயகர் காதர், துணை சபாநாயகர் ராமப்பா லமானி, அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் உட்பட மற்ற உறுப்பினர்களும் புதிய நுழைவு வாயில் வழியாக, சட்டசபை வளாத்திற்குள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி