உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.ஜி.பி., மாற்றம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: மாண்டியா கலவரத்தால் கர்நாடக அரசு அதிரடி

ஏ.டி.ஜி.பி., மாற்றம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: மாண்டியா கலவரத்தால் கர்நாடக அரசு அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாண்டியா: மாண்டியாவில் விநாயகர் ஊர்வலத்தில் வெடித்த கலவரத்தை அடுத்து, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்; இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் ஹிந்து அமைப்புகள், பொது மக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.பதரி கொப்பலு என்ற இடத்தில் ஊர்வலம் வந்த போது, அங்கிருந்த மர்ம நபர்கள், விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்களை வீசினர்; அருகில் இருந்த கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசினர்; பைக்குகள், கார்களை தீயிட்டு எரித்தனர்; தடுக்க வந்த போலீசார் மீதும் கற்களை வீசினர். இந்த கலவரத்தால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.கலவரம் நடந்த நாகமங்களாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது அலட்சியமாக இருந்த நாகமங்களா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.மேலும், மாநில உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., சரத் சந்திரா நேற்று ஊழியர்கள் நியமனப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். உளவுத்துறையின் புதிய கூடுதல் டி.ஜி.பி.,யாக ஹேமந்த் நிம்பால்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், மாண்டியா ம.ஜ.த., - எம்.பி.,யும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி, நேற்று கலவரம் நடந்த பகுதியில் ஆய்வு நடத்தினார்.பின், அவர் கூறியதாவது: முறையாக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவது தான் காங்கிரசின் செயலாக உள்ளது. 1990ல் அப்போதைய முதல்வர் வீரேந்திர பாட்டீலை பதவியில் இருந்து இறக்குவதற்காக, ராம்நகர், சென்னப்பட்டணாவில் மத கலவரத்தை ஏற்படுத்தினர்.அதேபோன்று நாகமங்களாவிலும் கலவரம் ஏற்படுத்தி உள்ளனர். இது ஒரு சிறிய சம்பவம் என்று மாநில உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இது பெரிய சம்பவம்; திட்டமிட்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sudha
செப் 14, 2024 11:49

இந்தியாவில் அப்படி நடக்காது,, துர்காபூர் பூஜை நிறுத்தப்படும்.அவ்வளவுதான்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 14, 2024 09:26

தினமும் ஐந்து முறை, ஆண்டு முழுவதும் இவர்கள் போடும் சப்தத்திற்கு இந்துக்கள் யாரும் பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் ஆண்டிற்கு ஒருமுறை வரும் விநாயக சதுர்த்தி, ராம நவமி, தீபாவளி, நவராத்திரி போன்ற இந்து பண்டிகைகளுக்கு இவர்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதாவது நாங்கள் அப்படித்தான் இருப்போம், மற்றவர்கள் எங்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்ற வீம்பு. இதுவே உலகம் முழுவதும் மதப் பிரச்சனைகளுக்கு காரணம்.


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2024 10:56

நிஜத்தை தெளிவாக கூறியுள்ளீர்கள் , அவுரங்ஷீப் , திப்பு காலத்தில் இருந்த அடக்குமுறைக்கும் இப்போதுள்ள அடக்குமுறைக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்பீர்கள் என்றால் உங்களுக்கு அங்கி என்ற பட்டமும் , கோபெக் என்றும் கூற வைப்பார்கள்


Nandakumar Naidu.
செப் 14, 2024 08:15

நம் சொந்த நாட்டிலேயே நாம் பயந்து வாழ வேண்டி உள்ளது.


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2024 07:59

போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது ஆனாலும் தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யாமல் தடுத்த அரசியல் வாதிகளை விட்டு விட்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது


Kasimani Baskaran
செப் 14, 2024 06:50

மத நல்லிணக்கம் வந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. திராவிட பாணியில் இப்படி ஓர் ஏற்பாடு.


SUBBU,MADURAI
செப் 14, 2024 05:43

Hindus offer sharbats and water to Muslim community during their Ramzan time. And this community never misses out on pelting stone during Hindus festival. When will Hindus learn from their mistake?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை