உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோழியை பைக்கில் அழைத்து வந்த வாலிபர் மீது தாக்குதல் 

தோழியை பைக்கில் அழைத்து வந்த வாலிபர் மீது தாக்குதல் 

ஷிவமொகா, : தோழியை பைக்கில் அழைத்து வந்ததால், வாலிபரை தாக்கிய 20 பேரை, போலீசார் தேடுகின்றனர்.ஷிவமொகா டவுன் சீகேஹட்டியில் வசிப்பவர் நந்தன், 26. தனியார் நிறுவன ஊழியர். இவரது நிறுவனத்தில் வேறு மதத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலை செய்கிறார். ஒரே நிறுவனம் என்பதால், நந்தனும், இளம்பெண்ணும் நட்பாக பழகினர்.நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும், இளம்பெண்ணை அவரது வீட்டிற்கு, நந்தன் பைக்கில் அழைத்து சென்றார்.பைக்கை மறித்த இளம்பெண் சார்ந்த மதத்தினர் 20 பேர், எங்கள் மத பெண்ணை, எப்படி பைக்கில் அழைத்து வருவாய் என்று, நந்தனிடம் கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். பலத்த காயம் அடைந்த நந்தனை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுபற்றி அறிந்ததும் ஷிவமொகா பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா, மருத்துவமனைக்கு சென்று, நந்தனுக்கு ஆறுதல் கூறினார். நந்தனை தாக்கிய 20 பேரை, ஷிவமொகா டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை