உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பேத்கர் சிலையை அவமதித்தவர் குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல்

அம்பேத்கர் சிலையை அவமதித்தவர் குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல்

கலபுரகி: அம்பேத்கர் சிலையை அவமதித்த வழக்கில், கைது செய்யப்பட்டவர் ஜாமினில் வந்தார். அவரையும், குடும்ப உறுப்பினர்களையும் வீடு புகுந்து, ஒரு கும்பல் தாக்கி உள்ளது. இதை கண்டித்து தாக்குதலுக்கு ஆளானவர்களின் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். டயருக்கு தீ வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.கலபுரகி அருகே கொத்தனுார் கிராமத்தில், அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த ஜனவரி 23ம் தேதி, மர்ம நபர்கள் அவமதித்தனர். இதை கண்டித்து தலித் அமைப்பினர், பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். சிலையை அவமதித்த சங்கமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். கலபுரகியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமின் கிடைத்தது. நேற்று முன்தினம் காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சங்கமேஷின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், சங்கமேஷ், அவரது மனைவி பிரியங்கா, சங்கமேஷின் அண்ணன் சுனில்குமார், அண்ணி ராஜேஸ்வரி, அப்பா மஹாதேவப்பா, அண்ணி தங்கேம்மா மீது சரமாரி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது. படுகாயம் அடைந்த ஆறு பேரையும், உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தாக்குதலை கண்டித்து நேற்று காலை சங்கமேஷின் உறவினர்கள் கலபுரகி - ஜுவர்கி சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். டயர்களுக்கு தீ வைத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.கலபுரகி போலீஸ் கமிஷனர் சேத்தன் அங்கு சென்று, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் அங்கு வந்த கலபுரகி எம்.பி., உமேஷ் ஜாதவ் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். போராட்டக்காரர்களை, போலீசார் கலைக்க முயன்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது, எம்.பி., உமேஷ் ஜாதவ் மயக்கம் போட்டு விழுந்தார். அவரை தொண்டர்கள் மீட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக, கலபுரகி கலெக்டர் பவுசியா உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ