உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேருடன் மரம் சாய்ந்ததில் ஆட்டோ ஓட்டுனர் பலி

வேருடன் மரம் சாய்ந்ததில் ஆட்டோ ஓட்டுனர் பலி

விஜயநகர்: ஆட்டோ மீது வேருடன் மரம் சாய்ந்ததில், ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார்.பெங்களூரில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. விஜயநகர் எம்.சி., லே - அவுட்டில், பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது.இதில், ஆட்டோ ஓட்டுனர் சிவருத்ரய்யாவின், 49, தலை, கால், மர்ம உறுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர், உடனடியாக போலீசார், மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.மரத்திற்கு அடியில் சிக்கியிருந்த அவரை, மீட்டு, அருகில் உள்ள காயத்ரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக விக்டோரியாவுக்கும், கிம்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.கடைசியாக விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.பெங்களூரு மேற்கு மண்டல துணை கமிஷனர் சுவாமி கூறுகையில், ''பெங்களூரு மாநகராட்சி சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.கோவிந்தராஜ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த 12ம் தேதி இதுபோன்று சர்வஞக் நுகர் ஜெய் பாரத் நகரில் மரம் விழுந்ததில், நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.மரம் விழுந்ததில் நொறுங்கிய ஆட்டோ. இடம்: விஜயநகர், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை