மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
2 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
2 hour(s) ago
சிக்கபல்லாபூர் : முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ., பச்சேகவுடா காங்கிரசுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் ரக்ஷா ராமையா, காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரை வெற்றி பெற வைக்க, காங்., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். வேறு கட்சியின் தலைவர்களை, காங்கிரசுக்கு இழுத்து வருகின்றனர்.ம.ஜ.த.,வின் தேவகவுடா, குமாரசாமிக்கு நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ., பச்சேகவுடாவை காங்கிரசில் சேர்க்க ஆலோசனை நடக்கிறது. உயர்கல்வி துறை அமைச்சர் சுதாகர், காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையா, எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், எம்.எல்.சி., சீதாராம் நேற்று காலை, சிக்கபல்லாபூரின் பச்சேகவுடா இல்லத்துக்கு சென்றனர். காங்கிரசுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்; அவரும் சம்மதித்துள்ளார்.கோலார் மாவட்டத்தில், பச்சேகவுடாவின் தந்தை பிள்ளப்பா, மிகவும் பிரபலமானவர். ஜனதா தளம் சார்பில் எம்.எல்.சி.,யாக இருந்தார். கோலார் - சிக்கபல்லாபூர் பால் கூட்டுறவு சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். ஒக்கலிக சமுதாயத்தை கட்டுக்குள் வைத்திருந்தார்.கடந்த 1975லிருந்து, இவரது குடும்பம் தேவகவுடாவுக்கு நெருக்கமானது. 2008ல் சிக்கபல்லாபூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பச்சேகவுடா, பெருமளவில் ஆதரவாளர்கள் வைத்துள்ளார். எளிமையான தலைவர் என்ற அடையாளத்தை, இன்றைக்கும் தக்க வைத்துள்ளார்.கடந்த 2023 சட்டசபை தேர்தலில், பொருளாதார உதவி செய்வதாக, ம.ஜ.த., மேலிடம் கூறியதால் சிக்கபல்லாபூர் தொகுதியில் களமிறங்கினார். ஆனால் பொருளாதார உதவி கிடைக்காததால், ம.ஜ.த., ஓட்டுகள் சிதறின; அவர் தோற்றார். பச்சேகவுடா கூறுகையில், ''ம.ஜ.த., தலைவர்கள், எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. பா.ஜ., வேட்பாளர் சுதாகர், எங்களுக்கு அரசியல் எதிராளி. இவருக்கு ஆதரவாக நான் நிற்கமாட்டேன். தேவகவுடா கூறுவது போன்று, மவுனமாக இருக்க என்னால் முடியாது. எனவே நான் காங்கிரசில் இணைகிறேன்,'' என்றார்.
2 hour(s) ago
2 hour(s) ago