உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள கோயில்களில் அரளி பூவிற்கு தடை: அரசு உத்தரவு

கேரள கோயில்களில் அரளி பூவிற்கு தடை: அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சூர்யா (23). நர்சிங் படித்துள்ளார். இவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து லண்டன் செல்வதற்காக அவர் தயாராகிக் கொண்டிருந்தார். செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவர், வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார். அதன் பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது. அரளி பூக்களுக்கு பதிலாக துளசி, செம்பருத்தி பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ganesun Iyer
மே 12, 2024 14:27

குடிச்சிட்டு பல பேர் சாவறானுங்க ஒயின் ஷாப், தொழ்ற்சாலைகளை தடை செய்ய வக்கில்லை அரளி பூவுக்கு கோவில்ல தடை செய்யறானுங்க


அசோகன்
மே 12, 2024 08:26

ஹிந்து கோவில்களை நசுக்க ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதாதா இவர்களுக்கு... ஹிந்துக்கள் இதை புரிந்துகொள்லாத வரை ஒன்றும் செய்யமுடியாது


R Kay
மே 12, 2024 00:41

மெண்டல்களிடம் பொறுப்பை கொடுத்தால் இப்படித்தான் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவார்கள்


Shankar J
மே 11, 2024 22:25

communist mindset...


lana
மே 11, 2024 21:02

ஒரு அஜீத் படம் காமெடி. இந்த ஆட்டோ கண்ணாடி திருப்பினால் அ‌ந்த ஆட்டோ எப்படி ஓடும். அது போலவே இதுவும். நீங்கள் இங்கு உ‌ள்ள கம்முனாட்டி களை வெளுத ஆல் அங்கு உள்ள கம்மி சரியாகுமா


Dharmavaan
மே 11, 2024 20:29

கோயில் வழிபாடுகளில் அரசு தலையிடுவது கண்டிக்கத்தக்கது கம்யூனிஸ்டுகளின் ஹிந்து எதிர்ப்பு வெறி


Ramesh Sargam
மே 11, 2024 20:11

அரளிப்பூக்கள் எல்லாம் கோவில்களில், வீடுகளில் காலம் காலமாக உபயோகப்படுத்துகிறார்கள் கோவில்களில் கொடுக்கப்படும் பூ தலையில் வைத்துகொள்ள, தின்பதற்கு அல்ல மேலும் அந்தப்பெண் மொபைல் போனில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்த பூவை தின்று இருக்கிறார் அது முழுக்க முழுக்க அவருடைய தவறு அதற்கு ஏன் கோவில்களில் அந்த அரளிப்பூவை தடை செய்யவேண்டும்


தமிழ்வேள்
மே 11, 2024 19:32

மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே கவனமின்றி ரயிலில் அடிபட்டு சாகிறார்கள் அதனால் ரயில்வே அல்லது மொபைல் ஃபோனை மொத்தமாக ஒழித்து விடலாமா?


கூறமுதலீ
மே 11, 2024 19:09

சாராயம் குடித்து நிறைய குடும்பங்கள் சீரழிகன்றன. சாராயத்தை தடை செய்ய வேண்டிய தானே.


thiruvazhimaruban kuttalampillai
மே 11, 2024 18:26

யாரோ ஒருவர் அர்ளி சாப்பிட்டு இறப்பு எற்பட்டதற்கு தெய்வங்களுக்கு அர்ளி பூ பயன்படுத்த கூடாது என்பது,பைத்தியம் பிடித்த அரசுக்கு யாரை திருப்தி படுத்தும் வேலை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ