உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை

மும்பை, 'கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக, 'லுக் அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீசை வெளியிட, பொதுத் துறை வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நம் நாட்டின் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். அவர்களை நாடு கடத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமலிருக்க, 2018ல், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க, பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்தது. இதன்படி, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அவர் நம் நாட்டில் இருந்து வெளியேற முடியாது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு நேற்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவுதம் படேல், மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க, பொதுத் துறை வங்கிகளுக்கு அதிகாரம் அளித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த வங்கிகள் வெளியிட்ட நோட்டீசுகளுக்கு குடியுரிமை துறை செயல்படாது.கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, நீதிமன்றம் அல்லது குற்றவியல் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை இந்த தீர்ப்பு பாதிக்காது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

veeramani
ஏப் 24, 2024 09:28

எந்த வங்கியும் தந்து பணத்தை லோனாகி கொடுப்பதில்லை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தை லோனாக கொடுக்கிறார்கள் லோனை பெற்றவர்கள் நாட்டைவிட்டு ஓடுவதினால் பாதிப்பு மக்களுக்குத்தான் இந்திய நீதிமன்றம் நல்லமுடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்


Dharmavaan
ஏப் 24, 2024 08:53

திருடனுக்கு துணை போகும் நீதித்துறை கேவலம்


Kasimani Baskaran
ஏப் 24, 2024 08:44

இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி கம்பி நீட்டுபவர்களை நீதிமன்றம் மூலம்தான் உள்நாட்டுக்குள் பிடித்து வைத்திருந்து தண்டிக்க வேண்டும் என்றால் அதற்கு அரை நூற்றாண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டும்


GMM
ஏப் 24, 2024 07:50

மத்திய அரசு வங்கிகளுக்கு அதிகாரம் கொடுத்த பின், சட்டத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு மட்டும் தனியாக அரசியல் சாசன அதிகாரம் கிடையாது என்றும் அரசு ஊழியர்கள் அல்லாத வழக்கறிஞர்கள் தான் நீதிபதி guide வங்கியில் கடன் பெற்றவர்கள் முழு விவரம் இருக்கும் வக்கீலிடம் என்ன விவரம் இருக்கும்? வங்கியின் அனுமதி இல்லாமல், வழக்கறிஞர்கள் வாத அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தால், அது செல்லாது பணத்திற்கு உத்தரவாதம் தேவை வங்கிகள் மூன்று மாதம் ஒரு முறை கடன் விவரம் கூட்டி, கடனாளி, வாரிசுகள், வழக்கறிஞர்கள் சொத்துக்களை முடக்க, கலெக்டருக்கு கடிதம் எழுத வேண்டும்


sethu
ஏப் 24, 2024 09:29

ஒன்றும் புரியவில்லை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ