உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்., -- எர்ணாகுளம் இடையே 2 மாதங்களில் வந்தே பாரத் ரயில்?

பெங்., -- எர்ணாகுளம் இடையே 2 மாதங்களில் வந்தே பாரத் ரயில்?

பெங்களூரு: 'பெங்களூரு -- எர்ணாகுளம் இடையில் இரண்டு மாதங்களில், வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம்' என்ற தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரில், அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக, பெங்களூரில் இருந்து காலை, இரவில் ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மைசூரில் இருந்து பெங்களூரு வழியாக மாலை நேரத்தில் கொச்சுவேலிக்கு ஒரு ரயில் செல்கிறது.இந்நிலையில், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5:00 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைகிறது. பயண நேரம் 11:00 மணி நேரமாக இருக்கிறது.இந்நிலையில், கர்நாடகா- - கேரளா பயணியர் சங்கத்தினர் சமீபத்தில், தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டல மேலாளர் ரங்கநாத் ரெட்டியை சந்தித்தனர். அப்போது பெங்களூரு- - எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த ரங்கநாத் ரெட்டி, இன்னும் இரண்டு மாதங்களில் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடப்பதால், யஷ்வந்த்பூர் -- கொச்சுவேலி இடையில் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும், 'கரீப் ரத ரயில்' சேவை ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ரயிலை ரத்து செய்யக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இதை ஏற்றுக் கொண்ட ரங்கநாத் ரெட்டி, சிக்கபானவாரா அல்லது பானஸ்வாடி ரயில் நிலையத்திலிருந்து, அந்த ரயிலை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை