உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடிந்தது இன்னொரு பாலம்: 2 மாதத்தில் பீஹாரில் 15வது சம்பவம்

இடிந்தது இன்னொரு பாலம்: 2 மாதத்தில் பீஹாரில் 15வது சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் கங்கை ஆற்றில் இன்று (ஆகஸ்ட் 17) பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 2 மாதத்தில் மொத்தம் 15 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன.பீஹார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடைபெற்றன. பாலம் இடிந்து விழும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதையடுத்து பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

மக்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் இன்று மற்றொரு பாலமும் சேதமடைந்தது. கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒருபகுதி இன்று இடிந்து விழுந்தது. பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் பீஹாரில் இடிந்து விழும் 15வது பாலம் இதுவாகும். அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சஸ்பெண்ட்

ஏற்கனவே பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 இன்ஜினியர்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முந்தைய சம்பவங்கள் வருமாறு

* ஜூன் 19ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.* ஜூன் 22ம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்ட பாலம் இடிந்து விழுந்தது.* ஜூன்23ம் தேதியன்று கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது.* ஜூன் 26ம் தேதி கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து விழுந்தது.* ஜூன் 28ம் தேதி மதுபானி மாவட்டத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. * ஜூலை 3ம் தேதி சரண் மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தன.* ஜூலை 4ம் தேதி கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தன.* ஜூலை 10ம் தேதி சஹர்சா மாவட்டத்தில் உள்ள மஹிசி கிராமத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.* ஆகஸ்ட் 9ம் தேதி கதிஹார் மாவட்டத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Nandakumar Naidu.
ஆக 17, 2024 19:52

ஏதோ தேச மற்றும் சமூக விரோதிகளின் சதி என்று நினைக்கிறேன். அப்படி ஒருவேளை உண்மை என்றால் அது தேச மற்றும் சமூக விரோதி அரசியல்வாதிகளின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் வருகிறது அல்லவா.


J.Isaac
ஆக 17, 2024 18:26

ஒன்றிய அரசு கப் சிப்


Nandakumar Naidu.
ஆக 17, 2024 19:46

ஊராட்சி அரசு பீஹார் போய் என்ன ஏது என்று விசாரிக்கலாமே?


Kasimani Baskaran
ஆக 17, 2024 13:31

நிதீஷின் பழைய கூட்டாளி லாலுவைதான் கேட்கவேண்டும். திராவிட மாடல் கட்டுமானம் போல தெரிகிறது.


ramesh
ஆக 17, 2024 17:38

உங்களுக்கு வசதியாக லாலுவிடம் கேட்க வேண்டும் . பல ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நிதிஷ் யோக்கியர். நீங்கள் சொல்லுவதை பார்த்தல் யோக்கியர் வருகிறார் செம்பு எடுத்து உள்ள வை என்று சொல்லுவது தான் ஞாபகம் வருகிறது .


ramesh
ஆக 17, 2024 17:46

கருணா நிதி ஆட்சி காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட பாலம் தரம் குறைந்தது என்று சொல்லி ஜெயலலிதா கைது செய்தார் .பாலம் அனைத்தும் மாதிரி எடுக்க பட்டு சோதனை செய்ய பட்டது .பரிசோதனை செய்ததில் தரமானது என்று தெரிந்ததால் அதோடு அந்தநடவடிக்கை கை விடபட்டது .இது தெரிந்து இருக்குமே காசிமணி


J.Isaac
ஆக 17, 2024 18:25

காந்தி, நேரு, காமராஜர் இல்லையே?


தியாகு
ஆக 17, 2024 13:09

பத்து ஆண்டுகள் கழித்து மோடிஜியின் ஆட்சி பெரிய இடத்தில் பாராளுமன்றம் கட்டி வெறும் ஆயிரம் கோடிரூபாயில் முடித்தது.


Ramesh Sargam
ஆக 17, 2024 12:42

பிஹாரில் பாலங்கள் பலமாக கட்டப்படவில்லை.


ramesh
ஆக 17, 2024 17:41

அரசியல்வாதிகள மற்றும் அதிகாரிகளின் சொத்தாக கட்ட பட்டுள்ளது .அதனால் தான் இப்படி மண் பாலத்தை கட்டி இருக்கிறார்கள்


Mannan
ஆக 17, 2024 11:54

வடக்கே என்ன நடந்தால் என்ன. இங்கே என்ன நடக்கிறது என்றே ஒரு கூட்டம் கண்ணில் விளக்கெண்ணெய் வைத்து பார்க்கும்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை