உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிகிச்சைக்காக மைசூரு வந்த பீஹார் முதல்வர் நிதீஷ் குமார்

சிகிச்சைக்காக மைசூரு வந்த பீஹார் முதல்வர் நிதீஷ் குமார்

மைசூரு: பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், மைசூருக்கு வந்து சிகிச்சை பெற்றார்.பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு, டாக்டர் ஜனார்த்தன் என்பவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன் பாட்னாவில் இருந்த டாக்டர் ஜனார்த்தன், சமீபத்தில் கர்நாடகாவின், மைசூரில் அடுக்குமாடி குடியிருப்பில், பிளாட் வாங்கி குடி பெயர்ந்தார்.மைசூரு நகரின், நஞ்சுமளிகே சாலையில் மருத்துவமனை நடத்துகிறார். இவரிடம் சிகிச்சை பெறும் நோக்கில், முதல்வர் நிதீஷ்குமார் நேற்று முன்தினம் காலை, பாட்னாவில் இருந்து சிறப்பு விமானத்தில் மைசூரு வந்தார்.போலீஸ் பாதுகாப்புடன் காலை 11:15 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றார். இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின், விமானத்தில் பாட்னா திரும்பினார்.நிதீஷ்குமாருடன், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய்குமர் ஜா, எம்.எல்.ஏ., சஞ்சீவ்குமார், பா.ஜ., தலைவர் ரஜனிஷ்குமார் உடன் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை