உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடுகள் முன் நின்ற பைக்குகளுக்கு தீ வைப்பு 

வீடுகள் முன் நின்ற பைக்குகளுக்கு தீ வைப்பு 

ஜே.பி., நகர் : பெங்களூரு ஜே.பி., நகர் சாமுண்டிநகரில் வசிக்கும் மக்கள், நேற்று முன்தினம் இரவு தங்கள் வீடுகள் முன், பைக்குகளை நிறுத்தி இருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், ஐந்து பைக்குகள் மீது பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பினர்.தீ பரவி, ஒரு வீட்டின் ஜன்னலில் பிடித்தது. அந்த வீட்டில் வசித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலறி அடித்து கொண்டு வெளியே வந்தனர். ஜன்னலில் பிடித்த தீயை, தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதன் பின்னர், பைக்குகள் மீது பிடித்த தீயும் அணைக்கப்பட்டது. ஆனாலும் ஐந்து பைக்குகளும் எரிந்து நாசமாகின. குடிபோதையில் மர்மநபர்கள், பைக்கிற்கு தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
ஏப் 04, 2024 09:58

காவல் துறை இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் இல்லை என்றால் இது போல நிகழ்வுகள் நடக்ககூடும்


DUBAI- Kovai Kalyana Raman
ஏப் 04, 2024 09:13

தமிழ்நாடு ரெஜிடேர் நம்பர்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ