உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் முதல் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல்

கேரளாவில் முதல் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். அடிக்கடி பறவைகளை தாக்கும் இந்நோயால் லட்சக்கணக்கான பறவைகள் அழிக்கப்படுகின்றன. இந்த காய்ச்சல் மனிதர்களை தாக்காது என்று கருதப்பட்ட நிலையில், ஏப்ரலில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 59 வயது நபர் பறவை காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.இதைத்தொடர்ந்து, கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆலப்புழா மாவட்டம், முகம்மா கிராமத்தில் சில நாட்களுக்கு முன் காகங்கள் மொத்தமாக இறந்து விழுந்தன. அந்த காகங்களின் உடல் மாதிரி எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள பறவைக்காய்ச்சல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டது.அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இறந்த காகங்களுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக முகம்மா பஞ்சாயத்து தலைவர் சுவப்னா பாபு தெரிவித்துள்ளார். இது புலம்பெயர்ந்த பறவைகளால் வருகிறதா அல்லது இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் பறவைகளிலிருந்து பரவியதா என்பது பற்றிய தகவல் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
ஜூன் 15, 2024 12:22

மலேசியாவில் காகத்தை பார்த்தாலே சுட்டு தள்ளி விடுவார்கள் . ஐவர் மடத்தில் காகத்திற்கு சோறு வைக்க தடை போட்டாலும் போடுவார்கள் இந்த அரளி பூ பார்ட்டிகள்.


Ramesh Sargam
ஜூன் 15, 2024 11:51

இந்தியாவில் எல்லா நோய்களும் கேரளாவிலிருந்துதான் பரவுகிறது. ஏன்?


கிருஷ்ணதாஸ்
ஜூன் 15, 2024 11:34

இது கேரள காகங்களுக்கு மட்டும்!


Sampath Kumar
ஜூன் 15, 2024 09:26

ஆஹா காகத்திற்க்கேவா ?சனீஸ்வர பகவானுக்கேவா போச்சு நிச்சயம் நாட்டுக்கு பேராபத்து வருகிறது சனீஸ்வரன் கோபத்துக்கு இந்த நாடு ஆளாக போகின்றது இறைவா எங்களை காப்பாற்று


ديفيد رافائيل
ஜூன் 15, 2024 08:42

இப்பல்லாம் காகம் இருக்கான்னு தெரியல Coimbatore locationல எங்க போனாலும். நீங்க news போட்டதுக்கப்புறமா தெரியுது காகம் இருக்குதுன்னு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை