உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - எம்.பி.,க்களிடம் ஆம் ஆத்மி அரசியல்

பா.ஜ., - எம்.பி.,க்களிடம் ஆம் ஆத்மி அரசியல்

ரோஸ் அவென்யூ:ஆம் ஆத்மி ராஜய்சபா எம்.பி., சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:டில்லி மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, பா.ஜ., - எம்.பி.,க்களை காணவில்லை. இதுபோன்ற கடுமையான சூழ்நிலையில் ஹரியானாவின் பா.ஜ., அரசு, டில்லிக்கு உரிமையான தண்ணீரை தடுத்து நிறுத்துவதன் மூலம் எங்களுடன் விரோதமாக நடந்து கொள்கிறது.கடுமையான பற்றாக்குறையால் வாடும் தேசியத் தலைநகருக்குத் தண்ணீர் வழங்க மத்தியிலும் ஹரியானாவிலும் உள்ள அரசுகளை டில்லியில் உள்ள ஏழு பா.ஜ., லோக்சபா உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இந்தச் சூழ்நிலையில், அரசியல் செய்வதையும், பழி போடுவதையும் தவிர்த்து ஆம் ஆத்மி அரசுக்கும் நகர மக்களுக்கும் பா.ஜ., ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை