உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., அதிருப்தியாளர்கள் வாய்க்கு மேலிடம் பூட்டு

பா.ஜ., அதிருப்தியாளர்கள் வாய்க்கு மேலிடம் பூட்டு

பெங்களூரு: உட்கட்சி விவகாரங்களை பகிரங்கமாக பேசக் கூடாது. எந்த அதிருப்தியாக இருந்தாலும், மேலிட தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு வரும்படி, பா.ஜ., அதிருப்தியாளர்களுக்கு, கட்சி மேலிடம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, 2023 நவம்பர் 10ம் தேதி, மாநில பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றார்.கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருக்கும்போது, முதல் முறை எம்.எல்.ஏ., ஆனவரும், எடியூரப்பாவின் மகன் என்பதாலும், விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்திருப்பது சரியில்லை என, அவர் நியமிக்கப்பட்ட நாள் முதலே, பல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, பிரதாப் சிம்ஹா உட்பட பலர் அடிக்கடி பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் பேசி வருகின்றனர்.இதை உன்னிப்பாக கவனித்து வந்த பா.ஜ., மேலிடம், சமீபத்தில் கர்நாடக தலைவர்களை டில்லிக்கு அழைத்தது. மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோருடன், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.அப்போது, உட்கட்சி விவகாரங்களை பகிரங்கமாக பேசக் கூடாது என்று அதிருப்தியாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. எந்த அதிருப்தியாக இருந்தாலும், மேலிட தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு வரும்படி திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.இதனால் தான், பா.ஜ., தலைவர்களின் பகிரங்க அதிருப்தி, தற்போதைக்கு அமைதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை