உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு தாவல்

பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு தாவல்

சண்டிகர்:ஹரியானா மாநில பா.ஜ., விவசாய அணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சுக்விந்தர் மண்டி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளுங்கட்சியான பா.ஜ., மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மூத்த நிர்வாகிகள் சிலர், பா.ஜ.,வில் இருந்து விலகி, வேறு கட்சிகளில் சேருகின்றனர்.பா.ஜ.,வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கரண் தேவ் கம்போஜ், காங்கிரஸ் கட்சியில் நேற்று முன் தினம் இணைந்தார்.இந்நிலையில், பா.ஜ.,வின் ஹரியானா மாநில விவசாய அணி தலைவர் சுக்விந்தர் மண்டி காங்கிரஸ் கட்சியில் நேற்று சேர்ந்தார். பத்ரா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வான மண்டி, பத்ரா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், பா.ஜ., தலைமை அவருக்கு சீட் தரவில்லை. ஏமாற்றம் அடைந்த மண்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ