உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்

பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை: கார்கே புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.இது குறித்து, அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் பா.ஜ., அரசு எந்த மாநிலம் மக்களுக்கு என்ன கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ., அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்கள். பலமுறை அவர்கள் ஒரு விஷயத்தை வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. பட்ஜெட் குறித்து எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. இது குறித்து தற்போது என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

THERESHM P.M.PERUMAL
ஜூலை 22, 2024 21:52

நாட்டை கூட்டி கொடுக்கும் உங்களிடம் கேட்க தேவையில்லை கர்கெ அவர்களே


V RAMASWAMY
ஜூலை 22, 2024 08:45

கேட்டல் எப்படிப்பட்ட மோசமான கருத்துக்கள் வருமென்று என்று அவர்களுக்கு தெரியும்.


பேசும் தமிழன்
ஜூலை 22, 2024 08:02

எதிர்கட்சி என்பது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும்....ஆனால் நீங்கள் அங்கே போய் கூச்சல் போட்டு விட்டு .....பாராளுமன்ற கேண்டீனில் போய் வடை சாம்பார் சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறீர்கள் ???


Visu
ஜூலை 22, 2024 04:29

பட்ஜெட் பற்றி முன்பே தெரிந்தால் ஷேர் மார்க்கெட்டில் புகுந்து சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கவா இந்திராகாந்திக்குப்பின் நம் நாட்டிற்கு காங்கிரஸால் நடந்த தீமைகளே அதிகம்


R K Raman
ஜூலை 22, 2024 03:52

சொந்த நலனுக்காக என்றால் உங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு நலனுக்காக அவர்கள் உழைக்கும் போது உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 20:16

இன்னும் இவர்கள் பதவியில் இருப்பது போலவே கற்பனை செய்து கொண்டு தீம்காவிடம் பாடம் கற்றுக்கொண்டு உருட்டித்திரிகிறார்கள்.


vikram
ஜூலை 21, 2024 17:35

ஆமை


Barakat Ali
ஜூலை 21, 2024 17:34

ஏன் கேட்கவேண்டும் ?? அவர்களிடம் நிபுணர்கள், அதிகாரிகள் உள்ளனர் ..... பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்படுகின்றன .... நாட்டை நாசமாக்கியவர்கள் நீங்கள் ..... உங்களிடம் ஏன் கருத்துக் கேட்க வேண்டும் .....


Venkatesh
ஜூலை 21, 2024 17:32

எதிர்க்க வேண்டும் என்றும் ஒரே காரணத்திற்காக பேசுகிறார்


Sundar
ஜூலை 21, 2024 17:26

பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் மற்றும் வெளி நடப்பு செஞ்சா உங்கள் கிட்ட எப்படி கருத்து கேப்பாங்க? சிறப்பாக வாதம் செய்து, மக்கள் பணி செய்யும் அரசியல் செய்து திருந்துங்க. உங்களை மதிப்பார்கள்.


மேலும் செய்திகள்