உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை நிவாரணம் அதிகரிப்பு பா.ஜ., தலைவர் எதிர்பார்ப்பு

மழை நிவாரணம் அதிகரிப்பு பா.ஜ., தலைவர் எதிர்பார்ப்பு

பெங்களூரு: ''பா.ஜ., ஆட்சியில் வழங்கியது போல், மழையால் வீடுகள் சேதமடைந்த மக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தினார்.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:மழை பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் நானும், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆய்வு நடத்தினோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.ஆங்காங்கே கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மழையால் சேதமடைந்த வீடுகள் கட்டிக் கொள்வதற்கு, மாநில அரசு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு செய்யாமல், பா.ஜ., ஆட்சியில் வழங்கப்பட்டது போல், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள, வழக்கமாக வழங்கப்படும் 40 ஆயிரம் ரூபாய்க்கு பதில், 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை