உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., 5-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பாட்னா தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்; வயநாடு தொகுதியில் சுரேந்திரன் போட்டி

பா.ஜ., 5-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பாட்னா தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்; வயநாடு தொகுதியில் சுரேந்திரன் போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பா.ஜ.,வின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் ரவி சங்கர் பிரசாத் பாட்னா தொகுதியில் போட்டியிடுகிறார்.

விரைவில் நடைபெற உள்ள பார்லிக்கான தேர்தலில் பா.ஜ.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மூன்றாவது கட்ட பட்டியலில் தமிழக வேட்பளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இன்று (24 ம் தேதி) 5-ம்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. Galleryஇதில் மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதிஜிதின் பிரசாதா பிலிப்பிட் தொகுதிராஜிவ் பிஸ்தா டார்ஜிலிங் (மேற்குவங்கம்)அபிஜித் கங்கோபத்யாய தம்லுக் தொகுதிதிலீல் கேஷ் பர்தாமன் - துர்காபூர் நித்யானந்த் ராய் உஜர்பூர் தொகுதிகிரிராஜ்சிங் பெகுசாராய் தொகுதிரவி சங்கர் பிரசாத் பாட்னா தொகுதிசீதா ஷோரன்(சிபுசோரனின் மருமகள் ) தும்கா தொகுதிஜெகதீஷ் ஷெட்டர்- பெல்காம் தொகுதி ( கர்நாடகா)சுதாகரன் சிக்கபலபூர் தொகுதி கர்நாடகா)தர்மேந்திரபிரதான் சம்பல்பூர் தொகுதி (ஒடிசா)பிரதாப் சாரங்கி பாலசோர் தொகுதி சம்பித்பத்ரா பூரி தொகுதி (ஒடிசா)அருண்கோவில்: மீரட் தொகுதிஅபராஜிதா சாரங்கி புவனேஸ்வர் தொகுதி ( ஒடிசா)கங்கனா ரனாவத் மண்டி தொகுதி இமாச்சல் பிரதேசம்நவீன் ஜிண்டால் குருஷே த்ரா தொகுதி சுரேந்திரன்-வயநாடுஆகியோர் உள்ளிட்ட 111 பேர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.தற்போது வெளியிடப்பட்டு உள்ள 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜவில் சேர்ந்த சீதாசோரனுக்கும், இன்று (24-ம் தேதி) இணைந்த நவீன் ஜிண்டால் -க்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி