உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில அரசுகளை திருடியது பா.ஜ; குற்றம் சாட்டுகிறார் கெஜ்ரிவால்

மாநில அரசுகளை திருடியது பா.ஜ; குற்றம் சாட்டுகிறார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி 10 மாநில அரசுகளை பா.ஜ., திருடிவிட்டது என டில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.டில்லியில் சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: மார்ச் 2016ம் ஆண்டு முதல் மார்ச் 2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடி 13 மாநில அரசுகளை கவிழ்க்க முயற்சி செய்தார். அதில் 10 மாநில அரசுகளை கவிழ்ப்பதில் அவர் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பா.ஜ., தவறாக பயன்படுத்தி வருகிறது. அஜித் பவார், பிரதாப் சர்நாயக் மற்றும் ஹசன் முஹ்ரிப் போன்ற மஹாராஷ்டிர அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டனர். ஆனால் அவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்தபோது அல்லது அவர்களின் தாய் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வ ஆதரித்தபோது அவை கைவிடப்பட்டன. 5 நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதி, மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பா.ஜ.,வில் ஊழல்வாதிகளை இப்போது தங்கள் கட்சியில் சேர்ப்பதாக குற்றம் சாட்டினேன். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் இதை ஒப்புக்கொள்கிறாரா? பா.ஜ.,வினர் கொஞ்சம் கூட வெட்கப்படுகிறார்களா? வேறு எந்த மாநிலத்திலும் ஆம் ஆத்மி அரசு கட்டியுள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பா.ஜ.,வால் கட்ட முடியாது. என்னை அவதூறு செய்ய அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., மூலம் போலி வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

M Ramachandran
செப் 29, 2024 19:36

உன் மூஞ்சி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தான் திருடி மற்றவனை திருடன் என்று கூறுவான்


NAGARAJAN
செப் 29, 2024 10:12

முற்றிலும் உண்மை.. . மறுக்க முடியாத உண்மை. . வெட்கித் தலைகுனிய வேண்டும் பாஜக. . இதெல்லாம் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு அழகல்ல


vijai
செப் 28, 2024 22:57

திருடா... திருடா...


S. Neelakanta Pillai
செப் 28, 2024 21:28

முதலில் நீங்க திருடியதை ஒப்படையுங்க அப்புறம் மற்றவங்களை பற்றி பேசலாம்.


Rajasekar Jayaraman
செப் 28, 2024 20:51

கூட்டு கொள்ளையனுக்கு வாய் கொழுப்பு அதிகம்.


N.Purushothaman
செப் 28, 2024 14:37

உயர் தர திருடன் ...


vijai
செப் 28, 2024 14:08

நீ மத்தவங்கள பத்தி பேசலாம்


Sridhar
செப் 28, 2024 12:35

கோர்ட் கேஸ் விசயமா பேசக்கூடாதுனு சொன்னதுனால இந்த பயலுக்கு என்ன பேசறதுனு தெரியல்ல. எதோ வாய்க்கு வந்தத பேசிக்கிட்டுருக்கார். என்னைக்கு இவரமாதிரியான மோசமான அரசியல்வாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படுகிறார்களோ, அன்றுதான் இந்தியாவுக்கு உய்வு. மக்களின் சிந்தனை திறன் உயர்வடைய வேண்டும். செந்தில் பாலாஜி ஜாமீனை கொண்டாடுபவரை பொதுமக்களே காரி உமிழும் நாள் என்னைக்கு வருதோ அன்னைக்குதான் நாடு முன்னேற்றம் அடையமுடியும். அதுவரை என்னதான் மோடி ரோடு போட்டு, விமானநிலையம், துறைமுகம், மருத்துவ கல்லூரி எல்லாம் கட்டி வேலை வாய்ப்பை கூட்டி, விலைவாசியை குறைத்தாலும் மக்கள் மனநிலை சிந்தனை திறன் உயரவில்லையென்றால், ஒரு பிரயோசனமும் இருக்காது.


Narasimhan
செப் 28, 2024 11:40

இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலபா.


sankar
செப் 28, 2024 10:38

எந்த ஒரு மாநில அரசையும் மோடி அரசு கலைத்தது இல்லை - நூறுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளை களைத்த காங்கிரசோடு கூட்டணி வைத்துக்கொண்டு பொய் சொல்லும் கயவனை கண்டு கொண்டும் காயடியுங்கள் மக்களே


சமீபத்திய செய்தி