உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த 20 ஆண்டுக்கும் பா.ஜ., ஆட்சி தான்: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உறுதி

அடுத்த 20 ஆண்டுக்கும் பா.ஜ., ஆட்சி தான்: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: ‛‛ நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளும் பா.ஜ., தான் ஆட்சி செய்யும்'', என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இருட்டடிப்பு செய்ய முயற்சி

ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி அளித்த பதிலுரை: ஜனாதிபதி உரை மீது தங்களது கருத்துகளை முன்வைத்த எம்.பி.,க்களுக்கு நன்றி.இந்த உரையில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற்று இருந்தன. தே.ஜ., கூட்டணியை நம்பி, 3வது முறையாக ஆதரவு அளித்து உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1a8pn8ak&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 60ஆண்டுகளுக்கு பிறகு, 3வது முறையாக நமது அரசு ஆட்சி அமைத்து உள்ளது. மக்கள் மகத்தான தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தேஜ கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். தேர்தலில், எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை மக்கள் தோற்கடித்து உள்ளனர். தேர்தலில், மக்கள் அளித்த தோல்வியை ஏற்க சில எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன. எங்களுக்கான வெற்றி மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை நிர்மாணிக்கும்.

விளம்பரம்

அரசியல் சாசனத்தை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசியலமைப்பு சட்டம் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல் உதவும் . எனது அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தை சிலர் கையில் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டது ஏன்.அரசியல் அமைப்பு சட்டத்தை மாணவர்கள் புரிந்து கொண்டு மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். குடியரசு தினம் இருக்கும் போது தனியாக அரசியல் சாசன தினம் ஏன் என எதிர்க்கட்சிகள் கேட்டன.

5வது இடத்திற்கு

மக்கள் கொடுத்த வெற்றியால், இந்திய பொருளாதாரம், 3வது இடத்திற்கு செல்லும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரத்தை 10 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். ‛ ஆட்டோ பைலட்' மோடில் இந்திய பொருளாதாரம் வளரும் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆட்டோ பைலட் முறையிலேயே காங்கிரஸ் ஆட்சி செய்தது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜ., ஆட்சி தான்.

வறுமை

சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது. ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான போராட்டத்தை அரசு முன்னெடுக்கும். இந்த வளர்ச்சி என்பது ஆரம்ப கட்டம் தான். வறுமைக்கு எதிராக போர் துவக்கி உள்ளோம். இன்னும் பல படிகள் வளரப் போகிறோம். மாநகர, பெருநகர வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் வகுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 3வது வளர்ந்த நாடு என்ற பெருமையை அரசுபடைக்கும். ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறோம்.

விவசாயிகளுக்கு உதவி

கடந்த 10 ஆண்டுளில் இல்லாத அளவிற்கு அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சி வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். சிறுநகரங்கள் கூட வரலாறு காணாத வளர்ச்சியை சந்திக்க உள்ளன. விவசாயிகளின் தேவைகளை கண்டறிந்து கடந்த 10 ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றியுள்ளோம். விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலையை இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்தோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரை துவக்கிய சிறிது நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கம் எழுப்பினர். கார்கே பேச அனுமதிக்கும்படி வலியுறுத்தினர். பிறகு, பிரதமர் உரையை புறக்கணித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

sundarsvpr
ஜூலை 06, 2024 17:24

மோடிக்கு பெருந்தன்மை இல்லை. 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் எதிர் கட்சி பாராளுமன்ற தலைவர் என்பதனை கூற ஏன் தயக்கம்..


K.Ramakrishnan
ஜூலை 04, 2024 12:46

இனி தேர்தல் கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்?


Sevvannan
ஜூலை 05, 2024 02:26

ஆரம்பித்து விட்டார் 2019 2024 வரும் இதையேதான் சொன்னீர்கள் 2029 வரை இதையே சொல்லிக் கொண்டு இருங்கள் மம்தா தேர்தலில் தில்லுமுல்லு அராஜகம் செய்து ஜெயிக்கிறார் என்ற உண்மையை கூட சொல்லக்கூடாது


prathab
ஜூலை 04, 2024 09:36

திராவிடிய சொம்பு தூக்கும் சங்கம் பத்திபேர், மற்றும் 2000 ஊ பிஸ்... கதறலை தாங்க முடியல...


prathab
ஜூலை 04, 2024 09:30

2000 ஊ பிஸ் எல்லாம் அப்டித்தான் இருக்கும்...


K.n. Dhasarathan
ஜூலை 03, 2024 20:54

இந்தமுறை வந்ததே பெரும் பாடு இதில் கனவு வேறா? முதலில் அடுத்த முறை தேறுவீர்களா என்று பாருங்கள் .


pmsamy
ஜூலை 03, 2024 18:04

வெறும் இருபது தான் இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம்


Sankara narayanan
ஜூலை 03, 2024 18:00

பேசுவதை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது


Senthoora
ஜூலை 03, 2024 17:42

கனவு காணும் உரிமை எல்லோருக்கும் இருக்கு, கலாம் ஐயா சொன்னது. சொல்லாமல் இருந்தால் கனவு பலிக்கும்.


Arasu
ஜூலை 03, 2024 17:12

ஹத்ராஸின் சிகட்ராரு பகுதியில் நடந்த விபத்தை பற்றி சொல்லவே இல்லை


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2024 17:10

ஐயோ ஐயோ அப்போ 71 வயது ஆகிவிடுமே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி