உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவில் உள்ள பைசாபாதில் பா.ஜ., தோல்வி

அயோத்தி ராமர் கோவில் உள்ள பைசாபாதில் பா.ஜ., தோல்வி

லக்னோ:கடந்த, 500 ஆண்டுகளாக முயன்றும் முடியாமல் போன, அயோத்தி ராமர் கோவிலை பா.ஜ., சமீபத்தில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்தது.இது, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக, ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் லாலு சிங் தோல்வி அடைந்தார். இங்கு, சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத், 54,567 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உ.பி.,யின் வாரணாசியில் பிரதமர் மோடி, லக்னோவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியிலும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரியிலும் வென்றனர்.காங்., வேட்பாளர்கள் ராகுல் மற்றும் கிஷோரி லால் சர்மா ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் வென்றனர். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி மதுராவில் வென்றார்.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங், கைசர்கஞ்ஜ் தொகுதியில் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்