மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7
ராம்நகர்: இடைத்தேர்தல் நடக்கும் சென்னப்பட்டணாவில் ம.ஜ.த., சின்னத்தில் போட்டியிட, பா.ஜ., -- எம்.எல்.சி., யோகேஸ்வர் மறுத்து விட்டார்.மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட பா.ஜ., -- எம்.எல்.சி., யோகேஸ்வர் தீவிர முயற்சி செய்து வருகிறார்.நேற்று முன்தினம் டில்லி சென்ற யோகேஸ்வர், மேலிட தலைவர்களை சந்தித்து தனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொண்டார். ஒருவேளை போட்டியிட சீட் கிடைக்காவிட்டால், சுயேச்சையாக போட்டியிடவும் தயாராகி வருகிறார்.இதற்கிடையில், சென்னப்பட்டணா தொகுதியை தக்கவைத்துக்கொள்ள, ம.ஜ.த.,வும் விரும்புகிறது. இதனால் தங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்படி, யோகேஸ்வரிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். பா.ஜ., சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என, அவர் அடம் பிடித்து வருகிறார்.லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதிக்கு உட்பட்ட சென்னப்பட்டணாவில் காங்கிரசுக்கு 85,000 ஓட்டுகள் கிடைத்தன. அந்தத் தொகுதியில் யோகேஸ்வர் சரியாக வேலை செய்யவில்லை என்றும், அவர் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 7