உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.எம்.டி.சி., பஸ்சில் பாம்பால் பயணியர் கிலி

பி.எம்.டி.சி., பஸ்சில் பாம்பால் பயணியர் கிலி

பெங்களூரு: பி.எம்.டி.சி., மின்சார பஸ்சுக்குள், பாம்பை பார்த்து பயணியர் பீதியடைந்தனர்.பெங்களூரின் கே.ஆர்., மார்க்கெட்டில் இருந்து, கே.ஆர்., புரத்துக்கு நேற்று முன் தினம் மாலை, பி.எம்.டி.சி., மின்சார பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணியர் கூட்டம் அதிகம் இருந்தது.பஸ்சின் பின்புற கண்ணாடியில் பாம்பு ஒன்று காணப்பட்டது. இதை பயணியரோ, நடத்துனரோ கவனிக்கவில்லை. பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி டிரைவர் கவனித்தார்.பஸ் டிரைவரிடம் தெரிவித்தார். அவரும் பஸ்சை நிறுத்திவிட்டு, பின்புற கண்ணாடியில் பாம்பு இருப்பதை பயணியரிடம் தெரிவித்தார். கிலியடைந்த பயணியர், கீழே இறங்கினர்.மாநகராட்சியின், வனப்பிரிவு ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் பாம்பை பிடித்து, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.இந்த மின்சார பஸ் டிப்போ எண் 29சை சேர்ந்ததாகும். பாம்பு எப்படி, எங்கு பஸ்சுக்குள் புகுந்தது என, தெரியவில்லை. அது கண்ணாடிக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. இல்லாவிட்டால் பயணியருக்கு அபாயம் ஏற்பட்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை