மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
4 hour(s) ago | 37
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
7 hour(s) ago | 5
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
9 hour(s) ago | 1
தட்சிண கன்னடா: மங்களூரு வாலிபரை, பிரேசிலை சேர்ந்த இளம்பெண் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த ராமானந்த் பாய் - - ப்ரீதம் பாய் தம்பதியின் மகன் ஆதித்யா. எட்டு ஆண்டுகளாக பிரேசிலில் பணியாற்றி வருகிறார்.இவர் பணியாற்றி வந்த நிறுவனத்தில் அந்நாட்டை சேர்ந்த டாடியானி என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகினர். இருவரும் காதலிக்க துவங்கினர். ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். தங்கள் விருப்பத்தை, அவரவர் பெற்றோரிடம் கூறினர். அவர்களும் சம்மதித்தனர்.டாடியானியின் பெற்றோர் அட்டிலியோ டோமாஜி, மரியா லுாசியா ஆகியோர், திருமணத்தை இந்தியாவில் நடத்த விரும்பி, இரண்டு வாரங்களுக்கு முன்பே, மங்களூரு வந்துவிட்டனர். இருவருக்கும் கடந்த 9ம் தேதி இந்திய முறைப்படி திருமணம் நடந்தது.இது தொடர்பாக டாடியானி கூறுகையில், ''எனக்கு இந்திய கலாசாரம் மிகவும் பிடிக்கும். சாப்பாடு, லட்டு போன்றவை மிகவும் பிடிக்கும். 2019ல் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. எனது விருப்பத்தை பெற்றோரிடம் கூறிய போது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தனர். அத்துடன் இந்திய முறைப்படி நடக்கும் திருமண வீடியோக்களை அவர்களுக்கு காட்டினேன். அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்,'' என்றார்.திருமண கோலத்தில் ஆதித்யா - டாடியானி.
4 hour(s) ago | 37
7 hour(s) ago | 5
9 hour(s) ago | 1