உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

புதுடில்லி: டில்லியில் பிரிட்டன் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, டில்லியைச் சேர்ந்த ஒரு நபருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபரை சந்திப்பதற்காக, தலைநகர் டில்லிக்கு விமானம் மூலம் வந்துள்ளார். தென்கிழக்கு டில்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தின் அருகே உள்ள மஹிபல்பூரில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அந்த அறையில் அந்த நபருடன் தங்கியிருக்கும் போது, பிரிட்டன் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு செல்லும் போது, ஓட்டலின் லிப்டில் வைத்து மற்றொரு நபரால் பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

nisar ahmad
மார் 13, 2025 23:42

இப்பத்தான் ஆட்சி பாடிச்சீங்க அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்களா


Mediagoons
மார் 13, 2025 21:21

பாஜ ஆட்சியில்தான் நாடு கெட்டு குட்டிசுவராகிவிட்டதற்கு இதுவே உதாரணம்


venugopal s
மார் 13, 2025 20:14

டெல்லியில் பாஜக ஆட்சி தானே!


Muthu Kumar
மார் 13, 2025 14:06

நபர்களின் பெயர் குறிப்பிடவில்லை ஒருவேளை மர்ம நபர்களாக இருக்குமோ?


Ramesh Sargam
மார் 13, 2025 13:28

யார் அந்த டெல்லி சார்?


SANKAR
மார் 13, 2025 12:54

I assume dmk ruling in Delhi!


Apposthalan samlin
மார் 13, 2025 12:45

அண்ணாமலை அங்கெ போய் போராட போகிறார்


ஆரூர் ரங்
மார் 13, 2025 13:44

கர்நாடகாவில் இஸ்ரேல் பெண்ணுக்கு நடந்தது. போராட்டம் பண்ணீங்களா?


KavikumarRam
மார் 13, 2025 12:17

சூப்பரப்பா. நம்மள கொள்ளையடித்த நாட்டை இப்படித்தான் கேவலப்படுத்தனும்.


Iniyan
மார் 13, 2025 12:32

என்ன ஒரு கேவலமான எண்ணம் உங்களுக்கு


Ray
மார் 13, 2025 12:49

அதிருக்கட்டும் தமிழ்நாட்டுல மட்டுந்தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லைன்னு சொன்னாங்களே. ஒருத்தனையும் இங்கே வரக் காணோமே. டில்லியில் ஆட்சியை பிடிச்ச உடனே இந்த பீடைகள் வேலையை ஆரம்பிச்சிட்டாங்களே.


KavikumarRam
மார் 13, 2025 14:03

நான் பதிவிட்டது சர்காசம். அது புரியாமல் உருட்ட வேண்டாம். மொதல்ல நீங்க தமிழ்நாட்டை கேவலப்படுத்திக்கொண்டிருக்கும் மாடல் அரசை குறிவைக்கவும். அந்தந்த மாநில பிரச்சினைகளை அதனதன் விளைவுகளை அந்தந்த மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும். இங்க நடக்கும் ஒரு கேவலத்துக்கும் பதில் சொல்றது கிடையாது. உடனே மணிப்பூர், மலேசியான்னு கிளம்பிறது.


इंसान
மார் 13, 2025 11:53

ஹிந்த என் தேவைக்காக நானே கத்துக்கிட்டது.


Ray
மார் 13, 2025 19:42

इनसान origin अरबी