உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தை புதைப்பு: காதலர் உட்பட மூவர் கைது

திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தை புதைப்பு: காதலர் உட்பட மூவர் கைது

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தையை மண்ணுக்குள் புதைத்த காதலர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.ஆலப்புழா மாவட்டம் தகழியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் எர்ணாகுளத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் குழந்தை பெற்றதை உறுதி செய்தனர். பெண்ணின் பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்து டாக்டர்கள் விசாரித்த போது திருமணமாகாமல் குழந்தை பெற்றது தெரிய வந்தது.மருத்துவமனை நிர்வாகம் தகழி போலீசில் புகார் செய்தது. போலீசார் இளம் பெண்ணை விசாரித்தனர். திருமணமாகாமல் தனக்கு பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாகவும், அதனால் அதை புதைத்து விட்டதாகவும் இளம்பெண் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின்படி தகழி அருகே பூச்சக்கலைச் சேர்ந்த தாமஸ் ஜோசப் 24, அவரது நண்பர் அசோக் ஜோசப் 30, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.போலீசார் கூறியதாவது: இளம் பெண்ணும், தாமஸ் ஜோசப்பும் ராஜஸ்தானில் படித்த போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதல் வயப்பட்டுள்ளனர். பின் அவர்கள் நெருங்கி பழகியதில் இளம்பெண் கர்ப்பமுற்றுள்ளார். இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் குணமடைந்து வந்த பின்னரே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். குழந்தை இறந்து பிறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா என தெரிய வரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை