உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா?: மத்திய அமைச்சர் கேள்வி

எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா?: மத்திய அமைச்சர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா? என கெஜ்ரிவாலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 12-13 ஆண்டுகளுக்கு முன்பு, அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் ஒரு இயக்கத்தைத் துவக்கினார். ஊழலற்ற ஆட்சியை அவர் விரும்பினார். மதுபான ஊழல் குறித்த அவரிடம் கருத்துகளை கேட்க வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்தவர் யார்?. நேற்று இண்டியா கூட்டணி கூட்டத்தில் மேடையில் இருந்தவர்கள் தான். எந்த அரசும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இயங்க முடியுமா?. ஏற்கனவே மூன்று முன்னாள் அமைச்சர்களை சிறையில் வைத்திருக்கும் அரசு. இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல், ஆட்சேபனைக்குரிய பல விஷயங்களை கூறியுள்ளார். மின்னணு ஓட்டு இயந்திரம் இல்லாமல் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற முடியாது என ராகுல் கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இது போன்ற கீழ்த்தரமான கருத்துகளை பேசுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

முருகன்
ஏப் 01, 2024 19:11

அதற்கு தானே நீங்கள் இருக்கும் போது


Shekar Prakash
ஏப் 01, 2024 18:51

அப்போ கர்நாடகா, தெலுங்கானா தேர்தல் வாக்குசீட்டு முறையிலா நடந்தது? அந்த இரண்டு தேர்தல் முடிவுகளை கேன்சல் செய்து விடலாமா?


கண்ணன்
ஏப் 01, 2024 17:07

ஆட்சி மாறுனா பலர் கம்பி எண்ணுவாங்க.. .


Selvakumar Krishna
ஏப் 01, 2024 16:45

அரவிந்த் கேஜரிவால் படித்து பதவிக்கு வந்தவர்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ