உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழத்தோட்டத்தில் புகுந்த புலி பிடிப்பு

பழத்தோட்டத்தில் புகுந்த புலி பிடிப்பு

மைசூரு, : பழத்தோட்டத்தில் பதுங்கிய புலியை, வனத்துறையினர் பிடித்ததால் கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.மைசூரு, ஹுன்சூரின், மளலி கிராமம் நாகரஹொளே தேசிய பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று அதிகாலை உணவு தேடி கிராமத்துக்குள் வந்த புலி ஒன்று, சுப்ரமணி என்பவரின் பழத்தோட்டத்தில் புகுந்து கொண்டது.காலையில் தோட்டத்துக்கு வந்த அவர், புலியை கவனித்தார். கிராமத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர், கும்கி யானைகள் மகேந்திரா, பீமாவுடன் கிராமத்துக்கு வந்தனர். பழத்தோட்டத்தில் புகுந்திருந்த புலியை, மயக்க ஊசி போட்டு பிடித்தனர். இந்த புலி 3 வயது பெண் புலியாகும். இதற்கு மருத்துவ பரிசோதனை செய்து, வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்