உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடித்து விட்டு பள்ளி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு

குடித்து விட்டு பள்ளி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு

பெங்களூரு, : குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 23 பள்ளி வாகன ஓட்டுனர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பெங்களூரில் நகரில் நேற்று போக்குவரத்து போலீசார், காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை இரண்டு மணி நேரம், பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தனர்.மொத்தம் 3,016 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அப்போது 23 வாகன ஓட்டுனர்கள், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும்போது, மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது.அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை, தற்காலிகமாக ரத்து செய்யும்படி, சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அத்துடன், ஓட்டவே தகுதியற்ற 11 வாகனங்களை கண்டுபிடித்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ., அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.பள்ளி வாகன ஓட்டுனர்கள் குடித்துள்ளனரா என, போக்குவரத்து போலீசார் பரிசோதனை செய்தனர். இடம்: பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை