உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிளஸ் 2 வகுப்பு ஹிந்தி தேர்வு மறுவாய்ப்பு தர சி.பி.எஸ்.இ., முடிவு

பிளஸ் 2 வகுப்பு ஹிந்தி தேர்வு மறுவாய்ப்பு தர சி.பி.எஸ்.இ., முடிவு

புதுடில்லி, 'நாளை நடக்கவுள்ள சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வின் ஹிந்தி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மற்றொரு தேதியில் வாய்ப்பு வழங்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ஹிந்தி தேர்வு மார்ச் 15ல் நடக்கிறது. மார்ச் 14ல் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சில பகுதிகளில் 15ல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, 15ம் தேதி நடக்கும் ஹிந்தி தேர்வை தவறவிடும் மாணவர்கள், மற்றொரு தேதியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை