துவாரகாவில் கொண்டாட்டம்
சமூக -ஆன்மிக அமைப்பான திவ்ய ஜோதி ஜாக்ரதி சன்ஸ்தான் சார்பில், துவாரகா 10வது செக்டார் டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் இன்றும் நாளையும் ஜென்மாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.ராஜபுத்திர இளவரசி மற்றும் துறவி மீராபாய் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அதேபோல, பகவான் கிருஷ்ணர் குறித்து பல்வேறு நாடகங்கள், உரைகள், நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஊழல், பெண்களுக்கு எதிரான அட்டூழியம், மத விரோதம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட சமூக பிரச்னைகளை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.கிருஷ்ண ஜெய்ந்திக்கே உரித்தான உரியடியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 3டி வடிவில் கோவர்தன மலை அமைக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மனு பாக்கர், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.