மேலும் செய்திகள்
கவாய் மீதான தாக்குதல் இந்தியரை கோபப்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி
2 hour(s) ago | 4
ஜனக் புரி:தண்ணீர் பிரச்னையை தீர்க்க அவரவர் தொகுதிக்குச் சென்று மக்களுக்கு உதவும்படி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் ஆதிஷி தெரிவித்துள்ளார்.மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி தற்போது திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று முன்தினம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஆகியோர் சந்தித்தனர்.நகரில் நிலவும் தண்ணீர், மின்சார பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, சிறையில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மாநில அமைச்சர் ஆதிஷி, ராஜ்யசபா உறுப்பினர் ராகவ் சதா ஆகியோர் நேற்று சந்தித்தனர்.சிறை நிர்வாக தகவலின்படி, இவர்கள் இருவரும் கெஜ்ரிவாலை சிறையின் பார்வையாளர் அறையில் அரைமணி நேரம் சந்தித்து பேசினர் என்று தெரிகிறது. இதுகுறித்து சிறைக்கு வெளியே ஆதிஷி கூறியதாவது:நகரில் நிலவும் தண்ணீர், மின்சார பிரச்னைகளை டிவியில் பார்த்து முதல்வர் அறிந்துள்ளார். பிரச்னையின் தீவிரம் குறித்து எங்களிடம் அவர் விசாரித்தார். இதற்கு தீர்வு குறித்து ஆலோசனைகளை கேட்டோம். அவர் தன்னை விடவும் டில்லி மக்களை பற்றி அதிகம் கவலைப்படுகிறார்.தண்ணீர் பிரச்னையை விரைவில் சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு எங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களையும் அவரவர் தொகுதிக்குச் சென்று மக்களுக்கு தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.இரண்டு நாட்களுக்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் தீ விபத்து காரணமாக டில்லியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்துமாறு கூறினார். மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்னைகளைப் பற்றியும் மட்டுமே கெஜ்ரிவால் சிந்திக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 4