| ADDED : மே 10, 2024 05:23 AM
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை, கர்நாடக முதல்வர் சித்தராமையா பார்வையிட்டார்.தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று 126வது மலர் கண்காட்சி துவங்குகிறது. சுற்றுலா பயணியர் பார்வைக்காக, 10 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊட்டிக்கு ஓய்வெடுக்க சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, நேற்று மாலை தன் குடும்பத்தினருடன், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்து, காரில் இருந்தவாறு பார்வையிட்டார். மலர் கண்காட்சி பணிகள் நடந்து வருவதை அறிந்து சிறிது நேரத்தில் திரும்பி சென்றார். அங்கு வந்த சுற்றுலா பயணியர், அவரை, போட்டோ எடுத்துச் சென்றனர்.முன்னதாக, ஊட்டியில் உள்ள கர்நாடக அரசின் தோட்டக்கலை துறை பூங்காவுக்கும் சென்ற முதல்வர், காரில் இறங்காமல் பார்த்து விட்டுச் சென்றார்.- நமது நிருபர் -