| ADDED : மே 24, 2024 06:14 AM
மைசூரு: 'காதல் கலப்பு திருமணம் செய்ய ஆசை இருந்தது,' என்று, கல்லுாரி நாள் நினைவுகளை முதல்வர் சித்தராமையா பகிர்ந்து உள்ளார்.மைசூரில் கலப்பு திருமணம் செய்தவர்கள், தங்கள் திருமணத்தை பதிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:எனக்கும் காதல் கலப்பு திருமணம் செய்ய, ஆசை இருந்தது. சட்ட கல்லுாரியில் படிக்கும் போது, வேறு ஜாதியை சேர்ந்த, ஒரு பெண்ணை எனக்கு பிடித்து இருந்தது. அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த பெண் சம்மதிக்கவில்லை. காதல் கலப்பு திருமணம் மூலம், ஜாதியை அழிக்க முடியும்.சமத்துவ சமுதாயத்தை உருவாக்க விரும்பினால், கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்க வேண்டும். இதற்கு எனது முழு ஆதரவு உண்டு. பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் திட்டங்களை, காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.கல்லுாரி நாட்களில் சிகரெட் பிடித்த அனுபவம் பற்றியும், முதல்வர் சித்தராமையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.