உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை: அமித்ஷா பெருமிதம்

சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை: அமித்ஷா பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்கிம்பூர்: 'பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.அசாம் மாநிலம் லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: உங்கள் எம்.பி யார், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும். அடுத்த பிரதமர் யார்? என்பதை நீங்கள் ஏப்ரல் 19ம் தேதி முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒரு பக்கம் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணியும், மறுபக்கம் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.,வும் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை.

சாதனை

இந்தியாவின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசு என்ன செய்துள்ளது?. 2004 முதல் 2014 வரை அசாமுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,62,000 கோடி மட்டுமே. அதேசமயம், 2014 முதல் தற்போது வரை ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 4,15,000 கோடி. இது தான் பிரதமர் மோடியின் 10 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனை ஆகும். வரும் ஆண்டுகளில் அசாம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சில நாட்களுக்கு முன்பு, அசாமின் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் கூறினார். அவரது பாட்டி அசாம் மாநிலம் வளர்ச்சி அடைய என்ன செய்தார்?. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஏப் 09, 2024 19:27

1947 லிருந்து இன்று வரை இந்திய சீன எல்லை ( இரு தரப்பும் ஏற்கும் வகையில்) வரையறுக்கப்பட்டதில்லை. இப்படியிருக்க ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள் என்பது வெற்று அரசியல்.


Lion Drsekar
ஏப் 09, 2024 15:55

இப்படியே எல்லோரும் பேசிக்கொண்டே இருங்கள் தற்போதைய வீடியோவை பாருங்கள் சுதந்திர இந்தியாவின் பேரன் செல்லுமிடமெல்லாம் அண்டைநாடான பாக்கிஸ்த்தான் கொடியுடன் அவர்கள் பேசும் பேச்சு , கூக்குரலைக் கேளுங்கள் எதையுமே கண்டுகொள்ளாமல் , மக்கள் குறைகளைக் கேட்க்காமல், செல்லும் போக்கு என்றைக்கு மாறப்போகிறதோ ? வந்தே மாதரம்


PRAKASHSATHASIVAM
ஏப் 09, 2024 15:36

FAKE


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ