| ADDED : ஜூலை 31, 2024 02:02 AM
சிம்லாஹிமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டத்தின் தோஷ் நல்லா பகுதியில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள நடைமேம்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.இதுதவிர, மூன்று கடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.இதற்கிடையே இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி, ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட துணை கமிஷனர் தோரூல் ராவீஷ் கூறுகையில், “மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனமழை, பேரிடர் காலங்களில் நதிக்கரையோரம் செல்வதையும், தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்குவதையோ தவிர்க்க வேண்டும்,'' என்றார்.