உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிளஸ்டர் பேருந்து தீயில் நாசம்

கிளஸ்டர் பேருந்து தீயில் நாசம்

ஜகத்புரி:கிழக்கு டில்லியின் ஜகத்புரியில் நேற்று காலை ஓடும் கிளஸ்டர் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.மத்திய செயலகத்தில் இருந்து சீமாபுரிக்கு கிளஸ்டர் பேருந்து நேற்று காலை 50 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. ஜகத்புரி அருகே பேருந்து காலை 9:30 மணி அளவில் வந்தபோது, திடீரென பேருந்து இன்ஜின் பகுதியில் இருந்து அதிக அளவில் புகை வருவதை பேருந்து ஓட்டுனர் பார்த்தார்.உடனடியாக பேருந்தை அப்படியே நிறுத்தினார். அனைத்து பயணியரையும் உடனடியாக கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்குள் பேருந்து எரியத் துவங்கியது. அவசர அவசரமாக அனைத்து பயணியரும் கீழே இறங்கி, பாதுகாப்பான துாரத்தில் நின்றனர்.பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத்துவங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்திருந்தது.குளிர்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். எனினும் பேருந்தை அதன் தயாரிப்பாளர் ஆய்வு செய்து, காரணத்தை கண்டறிவார் என, கிளஸ்டர் பேருந்து சேவையை நிர்வகிக்கும் டி.ஐ.எம்.டி.எஸ்., எனும் டில்லி ஒருங்கிணைந்த மல்டி-மாடல் டிரான்சிட் சிஸ்டம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தீ விபத்து காரணமாக ஜகத்புரி கடவுப்பாதையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை