உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதிக்காக இணைந்த முதல்வர்-கவர்னர்; அமைச்சர் நிர்மலாவை சந்தித்து கோரிக்கை

நிதிக்காக இணைந்த முதல்வர்-கவர்னர்; அமைச்சர் நிர்மலாவை சந்தித்து கோரிக்கை

புதுடில்லி: டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்றுசந்தித்து பேசினார்.அரிய நிகழ்வாக இந்த சந்திப்பின்போது, அந்த மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் உடனிருந்தார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு கவர்னராக இருந்த ஆரிப் முகமது கான் மற்றும் பினராயி விஜயன் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

குற்றச்சாட்டு

இந்நிலையில், புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார். இதையடுத்து, கவர்னர் - முதல்வர் இடையே சுமுக போக்கு நிலவுவதாகக் கூறப்படுகிறது. கேரளாவின் வயநாட்டில், கடந்த ஆண்டு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புக்கான நிவாரண நிதியை வழங்குவதில், மத்திய பா.ஜ., அரசு பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு நிலவியது. இந்த சூழலில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் உடன் டில்லி சென்ற பினராயி விஜயன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார். கேரளா ஹவுசில் நடந்த இந்த சந்திப்பின் போது, கேரள அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸ் உடனிருந்தார். முன்னதாக, மத்திய அமைச்சரை மூவரும் இணைந்து வரவேற்றனர். மொத்தம் 50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, கேரளாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பரபரப்பு

இந்த சந்திப்பு குறித்த தகவலை புகைப்படத்துடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும், பா.ஜ.,வுக்கும் ரகசிய உறவு இருப்பதாக கேரள காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பினராயி விஜயன் - நிர்மலா சீதாராமன் இடையிலான திடீர் சந்திப்பு, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vijay
மார் 13, 2025 09:12

கொடுக்க வேண்டிய நிதி எதில் மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க இல்லை என்று விளக்கமாக சொல்லுங்கள் ...சும்மா அடித்து விட கூடாது


Sampath Kumar
மார் 13, 2025 08:30

ஆதாவது உங்களுக்கு இன்னகமாக இருந்தால் கிடைக்கவேண்டியது கிடைக்கும் பின்னகமாக இருந்தால் கொடுக்க மாட்டர்கள் அப்படித்தானே யாரு வீடு காசு இது மக்கள் வரிப்பணம் அதை கொடுக்க மறுப்பது அரசியல் சாசன படி குற்றம் அதை தொடர்ந்து செய்து வருகிறது இந்த அரசு தமிழ் நாட்டு மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளார்கள் தக்க பதிலை தக்க நேரத்தில் தருவார்கள்


Dharmavaan
மார் 13, 2025 09:15

அது மத்திய அரசுக்கு சேர வேண்டிய காசு உன் அப்பா வீட்டு சொத்தல்ல


Ganapathy Subramanian
மார் 13, 2025 09:59

நீங்கள் சொல்லுவது மிகவும் சரியான ஒன்று. அவர்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக மகளிர் விடியா பயணம், மகளிர் உரிமைத்தொகை எல்லாம் கொடுப்பார்கள், இல்லையென்றால் அவர்களை பிச்சை எடுக்க வைப்பார்கள்.


Anand
மார் 13, 2025 10:41

அப்படி யாரு வீட்டு காசை மத்திய அரசு கொடுக்கவில்லை? சொல் பார்க்கலாம், சும்மா அடுச்சு விடுவது தான் கேடுகெட்ட இருநூறு ரூவா மதமாரி அடிமைகளின் பிழைப்பு, வெட்கக்கேடு.


vivek
மார் 13, 2025 11:47

இவன் பக்கா திராவிட சொம்பு ...


PARTHASARATHI J S
மார் 13, 2025 06:30

இதில் என்ன பரபரப்பு ? பாஜக மத்திய அரசு நிதி கொடுக்கும் முன்னர் அது எவ்வாறு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு வழிகளில் கண்காணிக்கிறது. மாநில அரசுகள் தமிழகம் உட்பட கேரளாவும் சரியாக கணக்கு காண்பிக்க வில்லை. ஊழல் என்று சொல்ல முடியாது. தங்கட்கு வேண்டியவர்கட்கு பணத்தை திருப்பி விடுகிறார்கள். அப்படி செய்வதால் அடுத்த இன்ஸ்டால்மெண்ட் தாமதமாகின்றது. அதை நிதியமைச்சரிடம் விளக்குகிறார் முதல்வரும் கவர்னரும். அங்கே அவர்கட்குள் ஈகோ கிடையாது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் முதல்வருக்கும், கவர்னருக்கும் ஏழாம் பொருத்தம். பிரச்னைகளை ஊடகத்திற்கு தெரிவித்து திமுக விளம்பரம் தேடுது. மத்திய அரசை குறை கூறிக்கொண்டு இருந்தால் நிதிவருகை தாமதம் ஆகின்றது. ஜிஎஸ்டி யினால் எந்த மாநிலமும் பாதிக்கப்படவில்லை. சிஸ்டம் நல்லாத்தான் போகுது.


Anand
மார் 13, 2025 10:47

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்று ஆட்சி செய்பவருக்கு அறிவு இருக்கவேண்டும் அல்லது அறிவு உள்ளவனையாவது துணைக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.. இவை இரண்டும் கிடையாது, தடியை தூக்கினவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி ஆளாளுக்கு மத்திய அரசை இழித்தும், பழித்தும், சவால் விட்டு காற்றில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தால் விளங்குமா?