உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடிந்து விழுந்த சிவாஜி சிலை: ஒப்பந்ததாரர் மீது வழக்கு

இடிந்து விழுந்த சிவாஜி சிலை: ஒப்பந்ததாரர் மீது வழக்கு

மும்பை, மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில், சிலையை வடிவமைத்து நிறுவிய ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமான ஆலோசகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரமாண்ட சிலை நிறுவப்பட்டது.கடந்த ஆண்டு டிச., 4ம் தேதி, இந்திய கடற்படை தினத்தன்று, இந்த சிலையை பிரதமர் திறந்து வைத்தார். ஒரு சில மாதங்களே ஆன நிலையில், சிவாஜி சிலை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இது, ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சிலையை வடிவமைத்து நிறுவிய ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டுமான ஆலோசகர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து சிவசேனா - உத்தவ் பிரிவு எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், ''சிவாஜி சிலை உடைந்ததற்கு, பிரதமர் மோடி, முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் பொறுப்பேற்க வேண்டும். மராத்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்திய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும்,'' என்றார்.துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று கூறியதாவது:நம் கடற்படை தான், சத்ரபதி சிவாஜி சிலையை வடிவமைத்து நிறுவியது. மாநில அரசுக்கு அதில் தொடர்பில்லை. பலவீனமான இரும்புக் கம்பிகளை வைத்து கட்டியுள்ளனர்.அங்கு தொடர்ந்து வீசும் கடல் காற்றினால், இரும்புக் கம்பிகள் அரிக்கப்பட்டுள்ளன. இந்தக் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஆக 28, 2024 11:13

கருணா ஆட்சிக் காலத்தில் குதிரைப் பந்தயத்தை ஒழித்த சாதனையை நினைவுகூற அண்ணா மேம்பாலத்தின் கீழ் குதிரைவீரர் சிலையை நிறுவினார். அது அட்டகாசமாக நிற்கிறது.அவரால் ஒழிக்கப்பட்ட குதிரைப் பந்தயமும் ஜோராக நடக்கிறது.


ஆரூர் ரங்
ஆக 28, 2024 11:09

சென்னைக்கு காவிரி நீரை வரவேற்க கருணாநிதி சைதாப்பேட்டையில் காவிரித் தாய்க்கு சிலை வைத்து கோலாகலமாகத் திறந்தார். அந்த காவிரித் தாய் சிலையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு குடம் காவிரி நீர் அல்லது அவர் மணக்க வைத்த கூவம் நீர் பரிசளிக்கப்படும்.


Krishnadoz Nayar
ஆக 28, 2024 09:30

ஏன் ஒப்பந்ததார்ர் மீது மட்டும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி பல ஆயிரக்கணகான கோடிகளை வீண்டித்துள்ளனர் இன்னும் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளே இன்றி அவதிப்படும் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்


கோவிந்த ராவ்
ஆக 28, 2024 08:03

பாவம்ணே. எத்தனை பெரிய மாகாராஜாவா இருந்தாலும் வெயிட்டான கத்தியை வெச்சுக்குட்டு எத்தனை நாள் நிக்க முடியும்? அடுத்த சிலையை வெக்கும் போது குதிரை மேல் உக்kaaந்த மாதுரி வெக்கச் சொல்லுங்க. இல்லே சிம்மாசனத்தில் உக்காந்திருக்kaற மாதிரி.


ஆரூர் ரங்
ஆக 28, 2024 11:05

அதனால்தான் ஈர வெங்காயத்தின் சிலைகளைத் தாங்க கைத்தடி, பார்க்க மூக்குக்கண்ணாடி, நிற்க செருப்புகள் எல்லாம் வைத்துள்ளார்களாம்.


அப்பாவி
ஆக 28, 2024 07:58

ஜீ தொறந்து வெச்சு பெரிய்ய்ய்ய்ய வசனமெல்லாம் பேசி ... கேவலமா இருக்கு. காண்டிராக்டர் எந்த ஐ.ஐ.டி ல படிச்சாரோ? கடைசியில் ஒரு கொத்தானாரை பிளி போட்டு கேசை முடிச்சு வெச்சிருவாங்க. சுபம்.


metturaan
ஆக 28, 2024 07:14

கவர்ச்சி அரசியலில் இதெல்லாம் சகஜம்... ஓட்டுக்கு காசும்.. இன்ன பிற இலவசங்களும் எதிர்பார்ப்பவர்கள் இதை பற்றி பேசி பயனில்லை...


Mani . V
ஆக 28, 2024 04:17

நாடு முழுவதுமே ஊழல்வாதிகள் பெருகி விட்டார்கள். புதிதாக கட்டிய தடுப்பணை, பாலம், சிலை, விளையாட்டரங்கம்,.... எல்லாமே பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தற்கொலை செய்து கொள்கிறது ஸாரி இடிந்து விழுந்து விடுகிறது. இது போன்ற ஒப்பந்ததாரர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தூக்கில் போடணும்.


அப்புசாமி
ஆக 28, 2024 14:07

அப்போ தொறந்து வெச்சு சல்யூட் அடிச்சவரை?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2024 01:14

கலைஞர் நிறுவிய அந்த காலத்திலேயே வள்ளுவன் சுனாமியவையே பார்த்து கம்பீரமா இருக்கார் , ஒரு சிறு மழை சிவாஜி காலி , அங்கு நேரு நிறுவிய சிவாஜி இன்னமும் இருக்கிறார் , பிஜேபி ஊழல் இல்லை இல்லவே இல்லை என்பதிற்கு சான்று


karthik
ஆக 29, 2024 09:08

கருணாநிதி நிறுவவில்லை.. நிறுவியது தமிழகத்தின் கைதேர்ந்த சிறப்பே. திருவள்ளுவர் சிலை அமைப்பு வேறு முறை கொண்டது.. இப்போது விழுந்த சிவாஜி சிலை வடிவமைப்பு வேறு முறையில் அமைந்தது. மேலும் திருவள்ளுவர் சிலையின் மாதிரி 1500 ஆண்டுகள் பழமையான மாத்தூர் கோவிலில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து எடுக்கப்பட்டது.