உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ., காங்., வேட்பாளர் சந்திரப்பா கண்டனம் 

ஜாதி பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ., காங்., வேட்பாளர் சந்திரப்பா கண்டனம் 

சித்ரதுர்கா : ஜாதி பெயரில் பா.ஜ., அரசியல் செய்வதாக, சித்ரதுர்கா காங்கிரஸ் வேட்பாளர் சந்திரப்பா கண்டனம் தெரிவித்தார்.சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த 2014 லோக்சபா தேர்தலில், சித்ரதுர்காவில் காங்கிரசில் வெற்றி பெற்றேன். கடந்த தேர்தலில் தோற்றாலும், மக்களுடன் தொடர்பில் உள்ளேன். நான் எம்.பி.,யாக இருந்த போது செய்த பணிகளை, மக்கள் இன்னமும் பாராட்டுகின்றனர்.இம்முறை என்னை ஆசிர்வதிப்பர் என்று நம்பிக்கை உள்ளது. கட்சியின் செயல் தலைவராக இருந்தேன். எனக்கு 'சீட்' கிடைக்காது என்று, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பினர்.'சீட்' கேட்டு யாரிடமும் செல்லவில்லை. நான் வெளிமாவட்டத்துகாரன் என்று, பா.ஜ.,வினர் மக்களிடம் கூறுகின்றனர். நான் வெளிமாவட்டத்துக்காரன் என்றால், பா.ஜ., வேட்பாளர் கோவிந்த் கார்ஜோள் யார்.எனது சொந்த ஊர் சிக்கமகளூரின் தரிகெரே. சித்ரதுர்கா மாவட்ட எல்லையில் உள்ளது. சந்திரப்பா தலித் இல்லை என்றும், பா.ஜ.,வினர் அவதுாறு பரப்புகின்றனர்.ஜாதி பெயரை வைத்து பா.ஜ., அரசியல் செய்வது வருத்தமாக உள்ளது. குவெம்பு, பசவண்ணர், கனகதாசர், நாராயணகுரு கொள்கைகளை பின்பற்றுகிறேன்.பா.ஜ., - ம.ஜ.த., புனிதமற்ற கூட்டணி. கடந்த தேர்தலின் போது எங்களுடன் ம.ஜ.த.,வினர் கூட்டணியில் இருந்தனர். அவர்கள் கூட்டணியை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை. சித்ரதுர்கா தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி அலை இல்லை.நான் எம்.பி.,யாக இருந்த போது, பத்ரா அணையில் இருந்து, வாணிவிலாஸ் சாகர் அணைக்கு, தண்ணீர் கொண்டு வந்தேன். பத்ரா மேலணை திட்டத்திற்கு, மத்திய அரசு 5,300 கோடி ரூபாய், நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை