உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஸ்மாவை களமிறக்க காங்கிரஸ் ஆலோசனை

குஸ்மாவை களமிறக்க காங்கிரஸ் ஆலோசனை

பெங்களூரு: சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., -- எம்.பி., மஞ்சுநாத்தின் மனைவி அனுசூயாவை எதிர்த்து, குஸ்மா ஹனுமந்தராயப்பாவை களமிறக்க, காங்கிரஸ் ஆலோசிக்கிறது.ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் களமிறங்கினார். வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில், கனரக தொழில் துறை அமைச்சரானார். இதனால் சென்னப்பட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.இந்த தொகுதியை கைப்பற்றி, குமாரசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்த துணை முதல்வர் சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார். தொகுதியில் தானே களமிறங்க ஆலோசித்தார். அதன்பின் தன் எண்ணத்தை மாற்றி கொண்டு, வேறு வேட்பாளரை தேடுகிறார்.சென்னப்பட்டணா தொகுதியை, கூட்டணி கட்சிகளும் கூட தீவிரமாக கருதுகின்றன. இங்கு பா.ஜ.,வின் யோகேஸ்வர் சீட் எதிர்பார்க்கிறார். ஆனால், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும், பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத்தின் மனைவியுமான அனுசூயாவை களமிறக்க, பா.ஜ., ஆலோசிக்கிறது.இதை உணர்ந்த சிவகுமார், குஸ்மா ஹனுமந்தராயப்பாவை களமிறக்க ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. குஸ்மா, மறைந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவியின் மனைவி. தற்போது இவர் காங்கிரசில் உள்ளார். 2023 சட்டசபை தேர்தலில், ராஜராஜேஸ்வரி நகரில் காங்., சார்பில் போட்டியிட்டு தோற்றார். இப்போது இவரை சென்னப்பட்டணா வேட்பாளராக்க, சிவகுமார் ஆர்வம் காண்பிப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை