உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரை சீரழிக்க காங்., திட்டம்: அமித் ஷா குற்றச்சாட்டு

காஷ்மீரை சீரழிக்க காங்., திட்டம்: அமித் ஷா குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் பயங்கரவாதிகளின் பிடிகளுக்குள் தள்ளப்பார்க்கின்றனர்,'' என்று தேர்தல் பிரசாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிஷ்த்வாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:ராகுலும், காங்கிரஸ் கட்சியும் ஜம்மு காஷ்மீரை மீண்டும் பயங்கரவாதத்தின் பிடிக்குள் தள்ள விரும்புகின்றனர். காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டு கட்சியும் பயங்கரவாதத்தை கையாள்வதில் மென்மையாக உள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றால், பயங்கரவாதிகளையும், ராணுவத்தினர் மீது கல்லெறிவோரையும் சிறைகளில் இருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளனர்.ஆனால் பிரதமர் மோடியின் அரசு மத்தியில் இருக்கும் வரை, இந்திய மண்ணில் பயங்கரவாதத்தை யாராலும் பரப்ப முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை