உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயபுராவில் உள்ஒப்பந்த அரசியலா? காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்குர் மறுப்பு

விஜயபுராவில் உள்ஒப்பந்த அரசியலா? காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்குர் மறுப்பு

விஜயபுரா: ''விஜயபுராவில் உள்ஒப்பந்த அரசியல் இல்லை. லோக்சபா தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,'' என, காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்குர் கூறினார்.விஜயபுரா காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்குர் அளித்த பேட்டி:மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் சர்வாதிகாரப் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவும், அனைத்து ஜாதி, மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையை உருவாக்கவும், அனைவரும் காங்கிரசுக்கு ஓட்டுப்போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

'விஷன் விஜயபுரா'

நான் எம்.பி.,யானால் விஜயபுரா தொகுதியை மேம்படுத்த, 'விஷன் விஜயபுரா' என்ற பெயரில் சில திட்டங்கள் வைத்து உள்ளேன்.அலமாட்டி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது, எனது முதல் முன்னுரிமையாக இருக்கும். விஜயபுராவில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், மும்பைக்கு அதிவிரைவு ரயில்கள் இயக்கவும், விஜயபுராவில் இருந்து டில்லி, பெங்களூருக்கு விமானங்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன். சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எதிரானவன் இல்லை

நான் எதிர்பார்த்ததை விட தொகுதியில் மக்கள் ஆதரவு உள்ளது. பலர் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து உள்ளனர். அரசின் வாக்குறுதித் திட்டங்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செய்யும் பணிகள், காங்கிரசுக்கு கைகொடுக்கும்.எனது வெற்றிக்கு கட்சியில் அனைவரும் இணைந்து செயல்படுகின்றனர். இங்கு உள்ஒப்பந்த அரசியல் இல்லை. ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஐந்து அமைச்சர்களால், லிங்காயத் ஓட்டுகள் எனக்கு கிடைக்கும். நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் இல்லை.மூன்று முறை விஜயபுரா எம்.பி.,யாக பா.ஜ.,வின் ரமேஷ் ஜிகஜினகி இருந்தார். ஆனால் தொகுதி வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. லோக்சபாவில் எதுவும் பேசாமல் கர்நாடகாவிற்கு துரோகம் செய்துவிட்டார்.தொழில் அதிபர்களின் 16 லட்சம் கோடி கடனை, மத்திய அரசு தள்ளுபடி செய்து உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு, ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம் என்று, தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளோம். இது முடியாத காரியம் இல்லை. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமை ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ