உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1,541 பார்க்கிங் தளங்களை மேம்படுத்த மாநகராட்சி திட்டம்

1,541 பார்க்கிங் தளங்களை மேம்படுத்த மாநகராட்சி திட்டம்

பகர்கஞ்ச்:நகரில் உள்ள 1,541 'பார்க்கிங்' தளங்களை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.நகரில் பெருகி வரும் வாகனங்களை நிறுத்துவதும் 'பார்க்கிங்' செய்வது மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண மாநகராட்சி முன்வந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நகர் முழுதும் உள்ள 1,541 'பார்க்கிங்' தளங்களை மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தளங்களில் 1.44 லட்சம் கார்கள் நிறுத்தும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்.பொது - தனியார் கூட்டு முயற்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உருவாக்குவது, பராமரிப்பது, செயல்படுத்துவது ஆகியவை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அதே வேளையில் மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்க வகை செய்யப்படும். 'ஸ்மார்ட் பார்க்கிங்' வசதி அமலுக்கு வரும்போது, நகரில் 'பார்க்கிங்' கட்டணம் உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.இந்தத் திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரப்படும். டெண்டர் எடுக்கும் நிறுவனம், மாதத்திற்கு 7 கோடி அல்லது வருவாயில் 50 சதவீதம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி