உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டத்தின் ஆட்சியை உணர்த்தும் நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

சட்டத்தின் ஆட்சியை உணர்த்தும் நீதிமன்றங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீதிமன்றங்கள் நீதியின் மீதான நம்பிக்கையையும், சட்டத்தின் ஆட்சியையும் உணர்த்துகின்றன என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.டில்லி சாஸ்தி பார்க் பகுதியில் புதிய நீதிமன்ற கட்டடங்கள் கட்ட, சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறியதாவது: நீதியை தேடி நீதிமன்றங்களுக்கு மக்கள் வர வேண்டும். இன்று அடிக்கல் நாட்டிய நீதிமன்ற கட்டடங்கள் உரிய நேரத்தில் கட்டி முடிக்கப்படும். அனைத்து வழக்கறிஞர்களும் தேவையான வசதிகளை பெறுவார்கள். நாங்கள் அவர்களின் நலன்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசியலைப்பு சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன், அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கவனமாக ஆலோசித்து, தீர்ப்பு வழங்குகிறார்கள். நீதிமன்றங்கள் நீதியின் மீதான நம்பிக்கையையும், சட்டத்தின் ஆட்சியையும் உணர்த்துகின்றன. இவ்வாறு சந்திரசூட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.Bala
ஜூலை 02, 2024 12:47

எப்படி நிதி இருப்பவர்களுக்கு ஒரு நீதி இல்லாதவர்களுக்கு ஒரு நீதி ? ஏனெனில் இந்தியாவின் பெரும்பாலான கட்சித்தலைவர்கள் கிரிமினல் குற்றம் செய்துவிட்டு ஜாமீனில் இருக்கிறார்கள். இவர்கள் வழக்கு எப்பொழுது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும் ? இதே நிலை ஒரு சாதாரண குற்றம் செய்த குடிமகனுக்கு கிடைக்குமா நீதியரசர் அவர்களே ?


KRISHNAN R
ஜூலை 02, 2024 12:44

எஸ்.உண்மைதான். சாதாரண மக்கள்கடைப்பிடிக மட்டும். மற்றவர்கள்..?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை