மேலும் செய்திகள்
மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி
3 hour(s) ago | 13
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
6 hour(s) ago
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
7 hour(s) ago | 10
ராய்ச்சூர்: வெயிலின் தாக்கம்விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் இல்லாததால், முதலை ஒன்று இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடுமையான வெப்பம் காரணமாக, கர்நாடகாவின் பல ஆறுகள் வறண்டு வருகின்றன. இங்குள்ள ஆறுகளில் அவ்வப்போது முதலைகள் தென்படுவது உண்டு. தண்ணீர் குடிக்க செல்லும் கால்நடைகள், கால்நடைகளை அழைத்து செல்பவர்களை தாக்கி கொன்றுள்ளன.ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இங்கும் முதலைகள் உள்ளன. தண்ணீர் இன்றி வேறு இடத்துக்கு செல்ல முடியாத முதலை ஒன்று, அங்குள்ள பாறை ஒன்றின் மீது இறந்து கிடந்தது.வெயிலின் தாக்கத்தால் இறந்த முதலை எலும்பும், தோலுமாக காணப்பட்டது. இறந்து பல நாட்களாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சிலர், தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
3 hour(s) ago | 13
6 hour(s) ago
7 hour(s) ago | 10