உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எச்.எம்.டி.,யிடம் உள்ள வனப்பகுதியை மீட்டு காப்பகம் கட்ட முடிவு

எச்.எம்.டி.,யிடம் உள்ள வனப்பகுதியை மீட்டு காப்பகம் கட்ட முடிவு

பெங்களூரு : ''வன நிலத்தை விற்கவோ, தானமாக வழங்கவோ யாருக்கும் அனுமதியில்லை. எச்.எம்.டி., கட்டுப்பாட்டில் உள்ள வன நிலத்தை மீட்ட பின், அங்கு காப்பகம் கட்டப்படும்,'' என, மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:வன நிலத்தை, மத்திய அமைச்சர் குமாரசாமியின் கனரகம், தொழில் துறையின் கீழ் உள்ள ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனும் எச்.எம்.டி., நிறுவனம் விற்றுள்ளது. இதை வனத்துறையினர் விற்கவில்லை.ஜூலை 11ம் தேதி எனது அலுவலகத்துக்கு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், புகார் அளித்திருந்தார். இதுகுறித்து அதிகாரிகளுடன் விவாதித்தபோது தான், உண்மை தெரியவந்தது. மைசூரு மன்னர் காலத்தில், பீன்யா, ஜாலஹள்ளி பகுதிகள் வனப்பகுதியாக அரசிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது.மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எம்.டி., நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் போன்று நடந்து கொள்கிறது. 1997 முதல் 2011 வரை எச்.எம்.டி.,யிடம் இருந்த சில வனப்பகுதிகளை, டாலர்ஸ் கன்ஸ்டிரக் ஷன்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்.யு.எஸ். ஸ்டீல்ஸ் நிறுவனம்; சில்வர் லைன் எஸ்டேட்ஸ், மானே கான்ஸ்டிரக் ஷன்ஸ் லிமிடெட், பிரிகேட் என்டர்பிரைசஸ், பாக்மானே டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 165 ஏக்கர் நிலம், 313 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.வன நிலத்தை விற்கவோ, தானமாக வழங்கவோ யாருக்கும் அனுமதியில்லை. எச்.எம்.டி., கட்டுப்பாட்டில் உள்ள வன நிலத்தை மீட்ட பின், அங்கு காப்பகம் கட்டப்படும்.மத்திய அமைச்சர் குமாரசாமிக்கும், எனக்கும் இடையே நல்லுறவு உள்ளது. இதுவரை வெறுப்பு அரசியல் செய்ததில்லை. இனியும் செய்ய மாட்டேன். கிடைத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ