உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகா கும்பமேளா குறித்து அவதூறு; 140 பேர் மீது வழக்குப்பதிவு

மகா கும்பமேளா குறித்து அவதூறு; 140 பேர் மீது வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது.மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்று புனித நீராடி இருப்பதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்திருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 87 லட்சம் பேர் புனித நீராடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கும்பமேளாவில் புனித நீராடிய பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைளதளங்களில் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகா கும்பமேளா டி.ஐ.ஜி., வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K.Ramakrishnan
பிப் 24, 2025 19:01

62 கோடி பேர் குளித்த தண்ணீர் அசுத்தம் என்று சொன்னால் கூட அவதூறு வழக்கு போடுவார்கள்..


jayvee
பிப் 24, 2025 16:16

உண்மையை சொல்லப்போனால் இது அரசு பணத்தில் வெக்கமேயில்லாமல் நாடு விட்டு நாடு சென்று சமாதியையும் பிணத்தையும் கும்பிடுவதை விட எவ்வ்லவோ மேல்


sribalajitraders
பிப் 24, 2025 14:54

ப்ரக்யராஜ் தண்ணீர் குளிப்பதற்கு தகுதி இல்லாமல் போய்விட்டது என்று அறிக்கை வந்து ரெம்ப நாள் ஆகுது


KavikumarRam
பிப் 24, 2025 16:38

உன்னை யாரு போகச்சொன்னது.


அசோகன்
பிப் 24, 2025 12:33

எப்போதும் பொய்களை மட்டுமே பேசும் தமிழ் ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் நல்லது


Apposthalan samlin
பிப் 24, 2025 11:53

கணிசமான மக்கள் காணாமல் நம்ம தமிழ் நாட்டில் இருந்து ரெண்டு பேர் போய்விடுவார்கள் இது எல்லாம் இயற்கை மரணத்தில் சேர்த்து விடுவார்கள் .


guna
பிப் 24, 2025 13:58

உன் மதத்தில் இருக்கும் ஓட்டைகளை பாருங்க அப்போஸ்தல் பாய்


Karthik
பிப் 24, 2025 11:31

அந்த அயோக்கியனுங்கள மொதல்ல நாடு கடத்துங்க.. முடிந்தால்.. கண்ணைக் கட்டி தண்ணீரின்றி நட்ட நடு பாலைவனத்தில் விட்டுவிடுங்கள். சனியன் ஒழியட்டும்.


சண்முகம்
பிப் 24, 2025 11:24

இம்மென்றால் சிறைவாசம், உம்மென்றால் வனவாசம். இது தான் இந்தியா முழுவதும் உள்ள பேச்சு சுதந்திரம்.


Bala
பிப் 24, 2025 13:41

ஓ அதான் நம்ம திராவிட மாடலார் இந்தியாவுக்கே நாங்கள்தான் வழிகாட்டி, நாங்கள்தான் முன் உதாரணம் என்று பீற்றிக்கொள்கிறாரா?


காங்கேயன்
பிப் 24, 2025 11:09

பிரயாக் ராஜ் த்ண்ணீர் குளிப்பதற்கு லாயக்கற்றதுன்னு ரிப்பிர்ட் குடுத்தவங்க மீது வழக்கு போட்டு, வேலையிலிருந்து டிஸ்மிஸ் செஞ்சு வூட்டுக்கு புல்டோசரையும் அனுப்புங்க.