உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய மார்க்கெட்டுகள் அமைவதில் தாமதம் நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல்

புதிய மார்க்கெட்டுகள் அமைவதில் தாமதம் நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல்

பெங்களூரு: காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய, பெங்களூரு புறநகரின், நான்கு திசைகளில் புதிதாக நான்கு மார்க்கெட்கள் கட்டும், மாநில அரசின் திட்டம் தாமதமாகிறது.பெங்களூரின் விவசாய உற்பத்தி மார்க்கெட், கலாசிபாளையா மார்க்கெட், கே.ஆர்., மார்க்கெட் என, மூன்று மார்க்கெட்கள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், பெங்களூரின், புறநகர் பகுதியில் நான்கு திசைகளிலும் புதிய பெரிய மார்க்கெட்டுகள் கட்ட, மாநில அரசு திட்டமிட்டது.பெங்களூரு கிழக்கு பகுதியான, சிங்கேன அக்ரஹாரா, மேற்கு பகுதியில் தாசனபுரா, வடக்கில் பேட்ராயனபுரா, தெற்கில் மைசூரு சாலையின், கெங்கேரி அருகில் மார்க்கெட் கட்டுவது, அரசின் திட்டம்.முதற்கட்டமாக யஷ்வந்த்பூர் மார்க்கெட்டுக்கு மாற்றாக, தாசனபுராவில், மார்க்கெட் கட்டப்பட்டது. அங்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சில பிரச்னைகள் உள்ளன. எனவே இடம் மாற, வியாபாரிகள் தயங்குகின்றனர். இதனால் வியாபாரிகள் இல்லாமல், இங்குள்ள கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.கலாசிபாளையா மார்க்கெட்டுக்கு மாற்றாக, மார்க்கெட் கட்ட சிங்கேனஹள்ளி அருகில் உள்ள கோளிமங்கலாவில், 2022ல் இடம் அடையாளம் காணப்பட்டது. இங்கு புதிய மார்க்கெட் கட்ட, 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 48 கோடி ரூபாய் செலுத்தி, 42.31 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.மார்க்கெட் கட்ட 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே கட்டுமான பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.பேட்ராயனபுராவில், மார்க்கெட் கட்ட 1998ம் ஆண்டிலேயே, 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அரசு, தனியார் ஒருங்கிணைப்பில் மார்க்கெட் கட்ட, அரசு திட்டமிட்டது. தனியார் ஒத்துழைப்பு அளிக்காததால், பணிகள் துவங்கவில்லை.மைசூரு சாலையின், கெங்கேரி அருகில் புதிய மார்க்கெட் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் இடம் அடையாளம் காணப்படவில்லை.புதிய மார்க்கெட்டுகள் கட்டும் திட்டம் முடிவடையாததால், யஷ்வந்த்பூர், கலாசிபாளையா மார்க்கெட்கள் மீதான அழுத்தத்தை குறைக்க முடியவில்லை. யஷ்வந்த்பூருக்கு தினமும் குறைந்தபட்சம் 800 முதல் 1,500க்கும் மேற்பட்ட, சரக்கு நிரம்பிய லாரிகள், மினி வாகனங்கள் நடமாடுகின்றன.அதேபோன்று கலாசிபாளையா மார்க்கெட்டுக்கும்,சுற்றுப்புற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து, அதிகமான வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்களுக்கு, பகல் நேரத்தில் தடைவிதித்து, இரவில் மட்டும் போக்குவரத்து நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த முடியவில்லை.ஏ.பி.எம்.சி., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிங்கேன அக்ரஹாரா, தாசனபுரா, பேட்ராயனபுரா மார்க்கெட்டுகள் அமைக்கும் விஷயம், நீதிமன்றத்தில் உள்ளது. எனவே திட்டம் தாமதமாகிறது. நீதிமன்றத்தில் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் முடிவுக்கு வரும். அதன்பின் மார்க்கெட்டுகள் அமைக்கும் திட்ட பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை